Captain Miller Box Office: வெறித்தனம் காட்டும் கேப்டன் மில்லர்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா?
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. அதோடு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதனடிப்படையில் கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ்?: தனுஷ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. பொங்கலை முன்னிட்டு ரிலீஸான கேப்டன் மில்லர் ரசிகர்களுக்கு செம்ம ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும், மற்ற மாநிலங்கள், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கேப்டன் மில்லர் முதல் காட்சி முடிந்துவிட்டது.

இதனையடுத்து கேப்டன் மில்லர் படம் குறித்து தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பெரும்பாலும் கேப்டன் மில்லர் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. தனுஷ் கேரியரில் இந்தப் படம் தரமான ஆக்ஷன் ப்ளாக் பஸ்டர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. தனுஷின் இன்ட்ரோ சீன் முதல் க்ளைமேக்ஸ் வரை பல கூஸ்பம்ஸ் காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பீரியட் ஜானரில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் கதை 1930களில் நடப்பதை போல உருவாகியுள்ளது. செட்டிங், சினிமோட்டோகிராபி இரண்டுமே பீரியட் ஜானர் படத்துக்கான உயிரோட்டமாக அமைந்துள்ளது எனவும், ஜிவி பிரகாஷின் பிஜிஎம் வேற லெவல் என்றும் விமர்சனம் கூறி வருகின்றனர். கேப்டன் மில்லர் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், அதைவிட இரண்டாம் பாதி முழுக்க ஆக்ஷனில் தாறுமாறான சம்பவமாக அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல் கடைசி 30 நிமிடங்கள் ஹாலிவுட் படத்துக்கு சாவல் விடும் வகையில் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். தனுஷுக்கு கேப்டன் மில்லர் லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக அமைந்துள்ளதால், பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் உறுதி என சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடத்துள்ள கேப்டன் மில்லர், முதல் நாளில் 30 முதல் 40 கோடி வரை வசூலிக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொங்கல் விடுமுறை முடியும் முன்பே கேப்டன் மில்லர் 100 கோடி வசூலை கடந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 200 முதல் 300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்கும் என கேப்டன் மில்லர் படத்துக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளனர் சினிமா விமர்சகர்கள். தனுஷின் கேரியரில் கேப்டன் மில்லர் தான் அதிகம் வசூல் செய்யும் படமாக இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது. முக்கியமாக கேப்டன் மில்லருக்குப் போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் மட்டுமே பொங்கல் ரேஸில் டஃப் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











