Captain Miller Box Office Day 3: கேப்டன் மில்லர் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா..?

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக 12ம் தேதி ரிலீஸானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு, முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. இந்நிலையில், மூன்றாவது நாளில் கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தெரியவந்துள்ளது.

கேப்டன் மில்லர் மூன்றாவது பாக்ஸ் ஆபிஸ்: தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 1930, 40களில் நடக்கும் பீரியட்ஸ் கதையாக உருவாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆக்‌ஷனில் தெறிக்கவிட்டுள்ள கேப்டன் மில்லர் படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 Captain Miller: Dhanushs Captain Miller collected 23 crores in Three days

தனுஷின் திருசிற்றம்பலம், வாத்தி படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தன. அந்த வரிசையில் கேப்டன் மில்லர் படத்தின் கலெக்‌ஷன் இருக்குமா என அதிக எதிர்பார்ப்பு இருந்தது. தற்போதைய நிலவரப்படி கேப்டன் மில்லரும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 12ம் தேதி வெளியான கேப்டன் மில்லர், முதல் நாளில் 8.7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

தனுஷின் படங்களில் இது குறைவான ஓபனிங் என்றே சொல்லப்படுகிறது. இரண்டாவது நாளில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7.45 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்திருந்தது. இந்நிலையில், மூன்றாவது நாளிலும் கேப்டன் மில்லர் வசூல் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக் கிழமையான நேற்று கேப்டன் மில்லர் படம் 7.25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கும் முன்பே கேப்டன் மில்லர் வசூல் குறைந்துள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதனடிப்படையில் மூன்று நாட்களில் மொத்தம் 23.40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அதேநேரம் கேப்டன் மில்லர் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் குறைவாக இருப்பதால் தான் வசூல் குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற கேப்டன் மில்லர், கடந்த இரண்டு நாட்களாக அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கதை, திரைக்கதை எதுவும் இல்லாமல் மேக்கிங்கை மட்டும் வைத்து கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X