Captain Miller: வெளியானது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. கில்லர் கில்லர் மோடில் தனுஷ் ரசிகர்கள்

சென்னை: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள கேப்டன் மில்லர், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

Captain Miller: Dhanushs Captain Miller first single Killer Killer Song released now

தனுஷுடன் சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான 'கில்லர் கில்லர்’ தற்போது வெளியாகியுள்ளது.

வெளியானது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்
கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தனுஷே இயக்குவதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லரை இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். பீரியட் ஜானரில் பொலிட்டிக்கல் ப்ளஸ் ஆக்‌ஷன் படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளதாம்.

சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் டீசர் வெளியாகி செம்ம மாஸ் காட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களுக்கு தெறிமாஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 'கில்லர் கில்லர்’ என்ற டைட்டிலில் கேபர் வாசுகி இந்தப் பாடலை எழுதியுள்ளார். 'நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்' என பாடலின் ஆரம்பமே மாஸ் காட்டுகிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் டீசரின் இன்னொரு வெர்ஷனாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. கில்லர் கில்லர் பாடலின் விஷுவல் முழுவதும் ரத்தம் தெறிக்க, போராளியாக கெத்து காட்டுகிறார் தனுஷ். அதேபோல், ஜிவி பிரகாஷின் இசையும் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. கில்லர் கில்லர் பாடல் வெளியானது முதலே தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது அடுத்தாண்டு பொங்கலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ரஜினியின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களுடன் கேப்டன் மில்லர் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X