Captain Miller: “கில்லர் கில்லர்..” கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்... தெறி மோடில் தனுஷ் ரசிகர்கள்

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Captain Miller: Dhanushs Captain Miller first single will be released on Coming 22nd

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்
தனுஷ் தற்போது தனது 50வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக உள்ளார். முன்னதாக அவர் நடித்த கேப்டன் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், அடுத்தாண்டு பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லரை இயக்கியுள்ளார்.

பீரியட் ஜானரில் செம்மையான ஆக்‌ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர். தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், இசைக்கு ஜிவி பிரகாஷ் குமார் தனுஷுடன் கை கோர்த்துள்ளார். அட்டகாசமான கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே கேப்டன் மில்லர் டீசர் வெளியாகி செம்ம மாஸ் காட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி, அதாவது நாளை மறுநாள் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக படு மிரட்டலான போஸ்டரும் வெளியாகியுள்ளது.

கையில் துப்பாக்கியுடன் போராளியின் லுக்கில் தனுஷ் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். அதேபோல், ஃபர்ஸ்ட் சிங்கிளின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'கில்லர் கில்லர்’ என்ற டைட்டிலில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, கேபர் வாசுகி எழுதியுள்ளார்.

இன்னொரு பக்கம் கேப்டன் மில்லர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தனுஷும் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இறுதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X