Captain Miller: கதை திருட்டு... தனுஷின் கேப்டன் மில்லருக்கு வந்த சிக்கல்... குட்டு வைத்த இயக்குநர்!

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த வாரம் 12ம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.

கதை திருட்டில் சிக்கிய கேப்டன் மில்லர்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் கேப்டன் மில்லரில் நடித்துள்ளனர்.

 Captain Miller: Dhanushs Captain Miller story copyright issues raised on Hollywood

இந்தப் படம் இதுவரை 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் லால் சலாம் தற்போது கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது. ஜாதி ரீதியாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார் அப்பகுதியின் சமஸ்தானத்து ராஜா. அதற்கு எதிராக தனுஷும் அவரது கிராமத்தினரும் போராடுவது தான் கேப்டன் மில்லர் படத்தின் கதை.

இதனிடையே பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும் தனுஷ், அங்கிருந்து வெளியேறி கொள்ளைகாரனாக மாறுவதோடு, பின்னர் கிராம மக்களுக்காக போராடுகிறார். ஒரே பிரச்சினையை பற்றிப் பேசாமல் மேலோட்டமாக படம் இருப்பதாக கேப்டன் மில்லருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. இதனால் அதிக எதிர்பார்ப்புடன் கேப்டன் மில்லர் தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் தடுமாறி வருகிறது.

இந்நிலையில், தான் கேப்டன் மில்லர் படத்தின் கதை திருட்டு குறித்து, பிரபல இயக்குநர் கீரா தனது முகநூலில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "சமீபத்தில் தான் தமிழ் திரைத் துறையைச் சார்ந்த இயக்குநர்கள் கொஞ்சம் வாசிப்புப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாகப் பேச முடிகிறது. பார்க்க முடிகிறது. புதிய நூல்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும், அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள்."

"ஆனால் சிலர் அப்படியே காப்பி அடித்து பணம் சம்பாதிக்க என்று புரிந்துகொள்வது ஆபத்தானது. சமீபத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்கியமானது அல்ல. ஒரு படைப்பாளனின் படைப்பைத் திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?. கேப்டன்_மில்லர் திரைப்படம் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதி, டிஸ்கவரி வெளியிட்டுள்ள பட்டத்து யானை நாவலின் அப்பட்டமான திருட்டாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். படைப்பாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

வேல ராமமூர்த்தி எழுத்தாளராக மட்டுமில்லாமல், பிரபல நடிகராகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய குற்றப்பரம்பரை நாவலை சசிகுமார் வெப் சீரிஸ்ஸாக இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் கதையும் வேல ராமமூர்த்தியின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது என்ற குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X