கேப்டன் மில்லர் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்..மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

சென்னை: லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ள தனுஷ், வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியானத் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது.

Dhanush Captain Miller

கேப்டன் மில்லர்: தனது கிராமத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு இருக்கும் மரியாதை மற்றும் பயத்தைப் பார்த்து அவர்களின் படையில் சேர்வதை லட்சியமாக கொண்டு இருக்கிறார் தனுஷ். ஆனால் தன் கிராமத்து மக்களையே பிரிட்டிஷ் படைகள் கொன்று குவிக்கும்போதுதான் தன் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதை எண்ணி, மனம் வருந்தி பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறி அவர்களுக்கு எதிராக கேப்டன் மில்லராக மாறி போராடுகிறார் தனுஷ். இலங்கையில் நடந்த சில போர் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அதை இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக நடந்த கதையாக சித்தரித்து கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார்.

அங்கீகாரம்: இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் 2024 என்ற பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.மேலும், கேப்டன் மில்லர் திரைப்படத்தை தவிர வேறு எந்த தமிழ் படமும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை தனுஷின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ராயன்: பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம், கேங்ஸ்டர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X