Jailer: ‘ஜெயிலர்’ படம் குறித்து தனுஷ் சொன்ன அந்த வார்த்தை..சோஷியல் மீடியாவில் வலம் வரும் கமெண்ட்டுகள்!
சென்னை: ஜெயிலர் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்து நடிகர் தனுஷ் போட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ்: கேப்டன் மில்லர் படம் 1940 மற்றும் 1990 காலகட்டத்தை பிரதிபலிக்கும் கதையாக இருக்கும் என்றும். மேலும், இப்படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மிரட்டலான டீசர்: இப்படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாள் அன்று படக்குழு வெளியிட்டது. 1.33 நிமிட ஓடக்கூடிய அந்த டீசரில் ஆரம்பம் முதல் டீசர் முடியும் வரை துப்பாக்கி சத்தம், குண்டு வெடிப்பு என சும்மா மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இது ஜெயிலர் வாரம்: இதையடுத்து தனுஷ் தனது 50வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து ஒரு பதிவினை போட்டுள்ளார். அந்த பதிவில், இது ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் மாமனாரை மறக்காத மருமகன் என்றும், சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











