ஈழப் போராட்டக் கதையை இங்கே எடுக்க முடியாது.. கேப்டன் மில்லர் இயக்குநர் சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: கேப்டன் மில்லர் படத்தை பார்த்த பலருக்கும் வரும் டவுட் என்னவென்றால் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்த படம் மூலம் என்னதான் சொல்ல வருகிறார் என்பது தான். படத்தின் மேக்கிங் உள்ளிட்ட பல விஷயங்கள் நல்லா இருந்தாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆகுதே என்கிற எண்ணம் படத்தை பார்க்கும் அனைவருக்கும் எழத்தான் செய்கிறது. அதற்கு காரணம் ஒரு சில காரணங்களுக்காக சமரசம் செய்துக் கொண்டு இந்த படத்தை அவர் உருவாக்கியிருப்பது தான் காரணம் என்பது அவரது லேட்டஸ்ட் பேட்டி மூலமாகவே தெரிகிறது.
இலங்கையில் மக்கள் அனுபவித்த சித்திரவதைகளும், அவர்களுக்கு எதிராக நடந்த அநியாயங்களையும் எடுத்து ஈழத்தில் பல போர்கள் நடைபெற்றுள்ளன. அந்த கதையை உருவாக்கிய அருண் மாதேஸ்வரன் அதை அப்படியே படமாக எடுக்காமல் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வகையில் மாற்றுகிறேன் என மாற்றியது தான் படம் சொல்ல வந்த கருத்து எல்லாமே குறியீடுகளாக இருக்கிறதே தவிர நச்சென்று நெஞ்சில் பதியாமல் போய் விடுகிறது.

கேப்டன் மில்லரில் என்ன பிரச்சனை?: கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் சிறப்பாக உள்ளது. ஆரம்பத்தில் தனுஷ் வெள்ளைக்காரர்களை கொடூரமாக ஒரு அறையில் வைத்து சுட்டுத் தள்ளும் காட்சி முதல் தனுஷை அவரது கூட்டாளியான இளங்கோ குமரவேல் காட்டிக் கொடுத்து விட்டதாக கதை நகரும் போதே பதை பதைக்க வைக்கிறது. பட்டாளத்தில் தனுஷ் சேர்ந்த காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரம் என்றே சொல்லலாம்.
ஆனால், அதன் பின்னர் 2ம் பாதியில் படம் ஒரே இடத்தில் சுருங்கி விடுவது தான் இந்த படத்தின் பெரிய பலவீனமாக தெரிகிறது. மேலும், இந்த படத்தின் கதை என்ன? கேப்டன் மில்லர் யார்? 1930ல் இப்படியொரு கதை நடந்ததா? இல்லையா? இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் இத்தனை நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தி போராளிகள் சண்டை போட்டார்களா? என பல கேள்விகள் கிளம்பி உள்ளன.

ஈழப் போர் தான் கதை: படத்தை முழுமையாக பார்த்து வியக்க வேண்டிய நிலையில், வினா எழுப்பும் அளவுக்கு கிளைமேக்ஸ் முடிந்து விட்ட நிலையில், அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எல்லாம் ரசிகர்களுக்கு இல்லாமலே போய் விடுகிறது. கேப்டன் மில்லர் என்கிற டைட்டில் வெளியானதுமே விடுதலை புலிகளை சேர்ந்த கேப்டன் மில்லரின் கதை தான் இது என தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தை பார்த்தால் தனுஷ் சிலோனுக்கு செல்லக் கூட இல்லை. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இந்த மொத்த கதையும் நகர்வது போலத்தான் காட்சிப்படுத்தி உள்ளனர். ஆனால், இது ஈழப் போர் கதை தான் என இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அபிஷேக் ராஜாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இங்கே எடுக்க முடியாது: 1987ம் ஆண்டு ஈழத்தில் நடந்த போரில் முதல் கருப்பு புலி கேப்டன் மில்லர் இறந்தது தான் இந்த படத்தின் கதை. அந்த கதையை எழுதி உருவாக்கி விட்டேன். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியே அந்த படத்தை எடுக்க முடியாது. அதனால், என்ன செய்வது என யோசித்து சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கு படத்தின் கதையை மாற்றியமைத்து விட்டேன். சிங்களர்களுக்கு பதிலாக வெள்ளைக்காரர்களை வில்லனாக்கி விட்டேன் என அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். அதன் காரணமாகத்தான் படத்தில் உண்மைத்தன்மை மிஸ் ஆகிறது என்றும் ஒட்டமுடியவில்லை என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. சிவராஜ்குமாரை போராளியாக காட்டியதன் பின்னணியிலும் குறியீடு இருப்பது தெளிவாக தெரிந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த கதை மாற்றப்பட்டதால் கனெக்ட் செய்யமுடியவில்லை.


Click it and Unblock the Notifications











