Captain miller: 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி.. தனுஷ் பட சுவாரஸ்யம் பகிர்ந்த பிரபலம்

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய 1930ம் ஆண்டின் காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த காலகட்டங்களில் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது-

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வெளியான நிலையில், இந்த மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Captain miller movie Art director updates about the Gun using by Dhanush in First look poster

கேப்டன் மில்லர் படத்தின் சுவாரஸ்யம் பகிர்ந்த பிரபலம்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய 1930ம் ஆண்டின் காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. படத்திற்காக தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் தனுஷ்.

இந்தப் படத்தை தனது ராக்கி, சாணிக்காயிதம் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், சூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது படத்தின் ரிலீஸ் டிசம்பருக்கு தள்ளிப் போயுள்ளது.

படத்தில் நடிகர் தனுஷ் நீண்ட தாடி, மீசை, தலைமுடி என வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் அவர் இதே லுக்குடன்தான் பங்கேற்றார். இதனிடையே சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மிரட்டலான வகையில் வெளியானது. இந்தப் போஸ்டரில் கொண்டையுடனும் கையில் கன்னுடனும் வித்தியாசமாக காணப்பட்டார் தனுஷ். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது.

முன்னதாக தனுஷின் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், அந்த வரிசையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படமும் இணைந்து அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்ததாக டி50 படத்தில் தனுஷ் இணையவுள்ளார். படத்தின் பூஜை நாளைய தினம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தின் கலை இயக்குநர் ராமலிங்கம் படம்குறித்த பல்வேறு விஷயங்களை பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். படத்தின் கதைக்களம் 1930ஐ சார்ந்தது என்று கூறிய அவர், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் பயன்படுத்தியது லெவிஸ் கன் என்றும் இரண்டாம் உலகப்போரில் இந்த கன் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கியை டம்மியாக உருவாக்காமல், மெட்டல் உள்ளிட்டவற்றை கொண்டு தானே ஒரிஜினலாக தயாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Captain miller movie Art director updates about the Gun using by Dhanush in First look poster

இதுபோல படத்தில் பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாகவும் படத்தின் ரிலீசின்போது இவை அனைத்தும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் சிறப்பான பிஜிஎம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த மாதத்தில் வெளியாகவுள்ள படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X