Captain miller: ஷங்கரை ஃபாலோ பண்ணும் அருண் மாதேஸ்வரன்.. எந்த விஷயத்துலன்னு பாருங்க!
சென்னை: நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே இன்றைய தினம் தனுஷ் பிறந்தநாளையொட்டி படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஷங்கரை பாலோ செய்யும் அருண் மாதேஸ்வரன்: நடிகர் தனுஷின் வாத்தி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இன்றைய தினம் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் தனுஷ். ஆனாலும் வாத்தி படத்தில் இளவயது கெட்டப்பில் அவரை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை எடுத்துள்ளார் அருண் மாதேஸ்வரன். படத்தில் நீண்ட தாடி, மீசை, தலைமுடி சகிதம் தனுஷின் கெட்டப் மிரட்டலாக அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், நேற்றிரவு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.
கையில் அந்த காலத்திய துப்பாக்கியுடன் மிரட்டலான உடல்மொழியை தனுஷ் வெளிப்படுத்தியிருந்தார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமாரும் இந்த டீசரில் மிரட்டியிருந்தனர். முன்னதாக ராக்கி, சாணிக்காயிதம் படங்களை கொடுத்திருந்த அருண் மாதேஸ்வரன், இத்தகையதோர் கதைக்களத்தை கையாண்டுள்ளது தனுஷ் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் டிசம்பர் 15ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக தன்னுடைய வழக்கத்திற்கு மாறாக 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது அடுத்த பாகத்திற்கும் சேர்த்து காட்சிகளை எடுத்துள்ளாராம் அருண் மாதேஸ்வரன். தற்போது கேப்டன் மில்லர் படத்தின் காட்சிகள் மொத்தமாக ஐந்தரை மணிநேரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளை வைத்து அடுத்த பாகத்திற்கான திட்டமிடலை அருண் மாதேஸ்வரன் மேற்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இரண்டிற்குமே மிகப்பெரிய வரவேற்பு காணப்படும் நிலையில், படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இந்தியன் 2 படத்தின் காட்சிகளை 6 மணிநேரத்திற்கு ஷங்கர் எடுத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. அதைவைத்து இந்தியன் 3 படம் திட்டமிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷங்கரின் பாணியில் கேப்டன் மில்லர் படத்தின் காட்சிகளை ஐந்தரை மணிநேரத்திற்கு அருண் மாதேஸ்வரன் எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்து, படத்தின் வரவேற்பை தொடர்ந்து படக்குழு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக விடுதலை படத்தின் காட்சிகளும் அதிகமாக எடுக்கப்பட்டு தற்போது விடுதலை 2 படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











