Dhanush - தனுஷ் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ்.. ரசிகர்களே ரெடியா இருங்க

சென்னை: Dhanush (தனுஷ்) தனுஷ் பிறந்தநாளுக்கு கேப்டன் மில்லரிலிருந்து என்ன அப்டேட் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ் பெயரும் பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் கடுமையான உருவ கேலிகளை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் தனது திறமையை வளர்த்து வளர்ந்திருக்கிறார்.

வாத்தி டூ கேப்டன் மில்லர் தனுஷ்: தனுஷ் கடைசியாக நடித்து வெளியான படம் வாத்தி. அப்படம் தோல்வியடைந்ததை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

 Captain Miller Movie Teaser Will Realese on Dhanush Birthday

தொடரும் சிக்கல்: அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் கவனம் ஈர்த்த அருணின் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் மீண்டும் தன்னை நிரூபிப்பார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து அப்படத்துக்கு சிக்கல் எழுந்துவருகிறது. இருப்பினும் அவைகளை எல்லாம் தாண்டி படம் வேகமாக வளர்ந்துவருகிறது இப்போது மதுரையில் நடந்துவரும் ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மதுரையில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

தனுஷ் 50: இதற்கிடையே தனுஷுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருக்கிறது. ஏற்கனவே படிக்காதவன், உத்தமபுத்திரன் ஆகிய படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது தனுஷின் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படம் தனுஷுக்கு 50ஆவது படமாக உருவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தை தனுஷே இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே ராஜ்கிரண் நடிப்பில் பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கி இயக்குநராகவும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர்: இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் வரும் ஜூன் 28ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அன்றைய தினம் தனுஷ் தற்போது நடித்துவரும் கேப்டன் மில்லர் ப்டத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கேப்டன் மில்லர் படத்திலிருந்து தனுஷ் பிறந்தநாளுக்கு அட்டகாசமான டீசர் ஒன்று வெளியாகவிருக்கிறது என கூறப்படுகிரது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X