தனுஷ் ரசிகர்களுக்கு செம நியூஸ்.. கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. இதோ அப்டேட்

சென்னை: Captain Miller Release(கேப்டன் மில்லர் ரிலீஸ்) தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த ஹிட் வைபை வாத்தி படத்தில் தவறவிட்டிருந்தார். குறிப்பாக இயக்குநர் தெலுங்கு இயக்குநர் என்பதால் இது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்று கேள்வி எழும் அளவுக்கு இயக்கியிருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.

Captain Miller Movie Will Release On 2024 Pongal

கேப்டன் மில்லர்: இதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் இயக்குநர்களில் முக்கியமானவராக அருண் கவனம் ஈர்த்ததால் இப்படம் மீது தனுஷ் ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

என்ன கதை?: இந்தப் படத்தில் தனுஷ் போராளியாக நடித்திருக்கிறார். குறிப்பாக இப்படமானது ஈழ பிரச்னையை சுற்றி நடக்கும்படி திரைக்கதையை அருண் மாதேஸ்வரன் நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனி தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்று ஒருவர் இருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. அதனால் இப்படம் ஈழ பிரச்னையை பேசும் என திரைத்துறையில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

இரண்டு பாகங்கள்: இந்தப் படமானது இரண்டு பாகங்களாக வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தாலும் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் மீண்டும் இணைந்திருக்கிறார். அதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. எனவே மீண்டும் அருணுடன் தனுஷ் இணையும் படம் கேப்டன் மில்லர் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.

எப்போது ரிலீஸ்: தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது அதன்படி படமானது 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தை தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X