Captain Miller: "தனுஷ் அப்படி இருந்தா பிடிக்கும்... அவரு சீரியஸ்ஸான ஆள் கிடையாது”: ப்ரியங்கா மோகன்

சென்னை: கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தனுஷுடன் நாயகி ப்ரியங்கா மோகனும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, ப்ரியங்கா மோகனிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார். அப்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் நடித்தது பற்றி ப்ரியங்கா மோகன் மனம் திறந்தார்.

ப்ரியங்கா மோகனுக்கு பிடித்த தனுஷ் லுக்
தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியங்கா மோகன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக டான் படத்திலும் நடித்திருந்தார். அதேபோல், எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ப்ரியங்கா மோகன். இதுவரை வழக்கமாக டூயட் பாடி வந்த ப்ரியங்கா மோகன், கேப்டன் மில்லரில் ஆக்‌ஷனில் தெறிக்க விட்டுள்ளாராம்.

 Captain Miller: Priyanka Mohan opens up about acting with Dhanush in Captain Miller

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லரில், ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். முக்கியமாக இதில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பக்கா ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நடித்தது பற்றி ப்ரியங்கா மோகன் மனம் திறந்துள்ளார். நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது வைரலாகி வருகிறது.

"கேப்டன் மில்லர் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானப் படம். எனக்குத் துப்பாக்கிலாம் பிடிக்கவே தெரியாது. அதுக்கு அவ்ளோ பயிற்சி கொடுத்தாங்க. இந்த படத்துல வர்ற கோவில் செட் பத்தி பேசியே ஆகணும். அது செட்னு நம்பவே முடியாத அளவுக்கு இருந்தது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ரொம்ப சீரியஸான நபர்னு நினைக்கிறாங்க. ஆனா அவர் ரொம்ப ஜாலியான ஆளு. Finally, 'Killer Killer, Captain Miller' நான் உங்களோட பெரிய ரசிகை தனுஷ் சார். இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு" என பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ப்ரியங்கா மோகனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கும் அவர் செம்ம க்யூட்டாக பதில் கூறினார். 'Poet or singer' தனுஷ் சாரோட பாடல் வரிகள் பிடிக்குமா இல்ல பாடுறது பிடிக்குமா என கேட்கப்பட்டதற்கு, தனுஷ் சார் பாடுறது பிடிக்கும், அவர் பாடினா இளையராஜா சார் பாடுற மாதிரி இருக்கும். அதேபோல் புதுப்பேட்டை மாதிரியான அக்ஷன் படமா கேப்டன் மில்லரில நடிச்சாச்சு. அதனால் இனி காதல் கொண்டேன் மாதிரியான படத்தில் தனுஷுடன் நடிக்க வேண்டும் எனக் கூறினார்.

முக்கியமாக, தனுஷ் எப்படி இருந்தா அழகு என கேட்டதற்கு, அவர் தாடி லுக் தான் தனக்கு பிடிக்கும் என ப்ரியங்கா மோகன் கூறியுள்ளார். மேலும் ஒரே நேரத்துல தனுஷ், செல்வராகவான் டைரக்ஷன்ல நடிக்க வாய்ப்பு வந்தா எது முதல் சாய்ஸ்ன்னு கேட்கப்பட்டது. அதற்கு, செல்வராகவன் சார் படத்துல தனுஷ் ஜோடியா நடிப்பேன் என க்யூட்டாக பதில் கூறி தனுஷை சில் செய்தார் ப்ரியங்கா மோகன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X