Captain Miller: லால் சலாம் படத்தை ஓவர்டேக் செய்த கேப்டன் மில்லர்... இது தனுஷோட பிளான் தானா..?
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்துக்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லருக்கு போட்டியாக லால் சலாம், அயலான் படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் கேப்டன் மில்லரில் இருந்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
லால் சலாமை ஓவர்டேக் செய்த கேப்டன் மில்லர்
கோலிவுட்டில் ரொம்பவே பிஸியான ஹீரோக்களில் தனுஷ் மிக முக்கியமானவர். ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ், சமீபத்தில் தான் அவரது 50வது படத்தை இயக்கி முடித்தார். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார். இன்னொரு பக்கம் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பொங்கலுக்கு வெளியாகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லரையும் ரத்தம் தெறிக்க தெறிக்க இயக்கியுள்ளாராம். கேப்டன் மில்லர் டீசரிலேயே இந்தப் படத்தின் ஆக்ஷன் ட்ரீட் எப்படி இருக்கும் என லீட் கொடுத்திருந்தார். தனுஷுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
பீரியட் ஜானரில் ஆக்ஷன் த்ரில்லர் மூவியாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், பொங்கல் ரேஸில் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லருக்கு போட்டியாக சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள அயலான் படங்களும் வெளியாகின்றன. இதில் இப்போதைக்கு கேப்டன் மில்லர் படம் தான் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்க முடிவெடுத்துவிட்டார் தனுஷ். அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதேபோல், லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிளும் இந்த வாரம் தான் வெளியாகியிருந்தது. இதனால், கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிளை வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளார். அதன்படி, கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.
லால் சலாம் செகண்ட் சிங்கிள் ஜனவரி முதல் வாரம் தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்பே கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் மட்டுமின்றி, ட்ரெய்லரையும் வெளியிட படக்குழு பிளான் செய்துள்ளதாம். அதேநேரம் லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி ஜனவரி 26ல் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











