Captain Miller: கேப்டன் மில்லர் விழாவில் ஜெயிலருக்கு நன்றி... சிவராஜ்குமாருக்கு விஷயமே தெரியாதா..?

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ்குமார், ஜெயிலர் படத்திற்கு கொடுத்த ஆதரவுக்காக நன்றி கூறினார்.

கேப்டன் மில்லர் விழாவில் ஜெயிலர் படத்துக்கு நன்றி
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ளது. தனுஷுடன் ப்ரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

 Captain Miller: Shivarajkumar thanked Jailer at the Captain Miller Audio Launch

ஏற்கனவே கேப்டன் மில்லர் படத்தின் டீசர், 3 பாடல்கள் வெளியாகிவிட்டன. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் கலந்துகொண்டார். மேலும், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சித் தொடங்கும் முன்னரே கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இது இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படக்குழுவினர் மேடையில் ஏறி தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது பேசிய சிவராஜ்குமார், தனுஷுக்காகவே கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததாக மனம் திறந்து கூறினார்.

அதாவது, "இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கதையே சொல்லவில்லை என்றாலும், தனுஷ் நடிப்பது தெரிந்திருந்தால் நான் கண்டிப்பாக ஓகே சொல்லியிருப்பேன். தனுஷை அவரோட முதல் படத்திலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். கேப்டன் மில்லரில் தனுஷ் எனக்காக ஒரு பாடலும் பாடியிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் மகன்களுடன் கிரிக்கெட் விளையாடியதை மறக்கவே முடியாது என்றார்.

முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலரில் நடித்தது குறித்தும், அந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்தார் சிவராஜ்குமார். தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில், ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக சிவராஜ்குமார் நன்றி சொன்னது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ், பின்னர் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார்.

இந்த சூழலில் ஜெயிலர் படம் பற்றி கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார் பேசியது வைரலாகி வருகிறது. கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படத்தில் நரசிம்ஹா என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிவராஜ்குமார். மொத்தமே இரண்டே சீன்களில் நடித்திருந்தாலும், ரஜினியை விட செம்ம மாஸ் காட்டியிருந்தார். ஜெயிலர் ரிலீஸுக்குப் பின்னர் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்ட சிவராஜ்குமார், கேப்டன் மில்லர் படத்திலும் மாஸ் காட்டியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X