For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூட்டோடு சூடாக கேப்டன் மில்லர் ஷூட்டிங்..தனுஷுக்கு இது வித்தியாசமான படமாக இருக்குமா?

  |

  சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், 'கேப்டன் மில்லர்' படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

  தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த ஆண்டு பின்னடைவு இருந்தாலும் திரைப்பட வாழ்க்கை செழிப்பாக இருக்கிறது.

  கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என படங்கள் வெளியாகி வரவேற்பை பெறும் நிலையில் அடுத்த படத்தின் சூட்டிங்கையும் ஆரம்பித்து விட்டார்.

  தெலுங்கிலும் வாத்தி படத்திற்கு பின்னணி கொடுக்கும் தனுஷ்.. இன்னும் என்னென்ன வித்தை வச்சிருக்காரோ!தெலுங்கிலும் வாத்தி படத்திற்கு பின்னணி கொடுக்கும் தனுஷ்.. இன்னும் என்னென்ன வித்தை வச்சிருக்காரோ!

   தனுஷுக்கு சந்தோஷம் தந்த 2022

  தனுஷுக்கு சந்தோஷம் தந்த 2022

  நடிகர் தனுஷுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு என்று சொல்லலாம். தனிப்பட்ட வாழ்க்கை சோகம் என்றாலும் திரை வாழ்க்கை சந்தோஷத்தை தந்துள்ளது. அவரது கிரே மேன் மதிப்பான ஒரு ரோலை செய்ததால் பாராட்டப்பட்டார். அந்த இயக்குநர்களின் அடுத்த படத்தில் அவரும் இருப்பார் என அறிவித்துள்ளனர். அடுத்து அவரது நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டில் இணைந்தது. அடுத்து செல்வராகவன், யுவன் காம்போவில் மிரட்டலாக வெளிவர உள்ளது. வாத்தி படம் தயாராகி வருகிறது. படம் வெளி வரும்போதே அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கையும் ஆரம்பித்து விட்டார்.

   அடுத்தடுத்த படம் அடுத்த படம் ரத்தம் கொப்பளிக்கும் படமா?

  அடுத்தடுத்த படம் அடுத்த படம் ரத்தம் கொப்பளிக்கும் படமா?

  அடுத்து ராக்கி, சாணிகாயிதம் பட இயக்குநர் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளார் தனுஷ். கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக, திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, கேப்டன் மில்லர் பட பூஜை இன்று தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சாணிகாயித இயக்குநர் படம் ரத்தம் கொப்பளிக்குமா?

   நாயகி பிரியங்கா, தெலுங்கு பிரபலம் சந்தீப் கிஷன்

  நாயகி பிரியங்கா, தெலுங்கு பிரபலம் சந்தீப் கிஷன்

  இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

   இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ரத்தம் கொப்பளிக்கும் காட்சிகள்

  இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ரத்தம் கொப்பளிக்கும் காட்சிகள்

  ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார், மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். "கேப்டன் மில்லர்" படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. "ராக்கி, சாணிகாயிதம்" படங்களை தயாரித்த அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவதால் இது ஒரு டார்க் மோடு படமாக இருக்கும். வன்முறைக்காட்சிகளை தனது படத்தில் அதிகம் வைக்கும் அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்திலும் வன்முறை கொப்பளிக்கும் வகையில் தான் எடுப்பார் என தெரிகிறது.

   தனுஷை வைத்து சித்திரமா? வன்முறைப்படமா?

  தனுஷை வைத்து சித்திரமா? வன்முறைப்படமா?

  கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது. அதனால் இப்படம் ஏதோ ஜாங்கோ படம் போல் போஸ்டர் லுக் இருப்பதால் ஏதோ செய்யப்போகிறார் இயக்குநர் என தெரிகிறது. தனுஷ் எதையும் தாங்கும் நடிகர் என்பதால் அவரை வைத்து அழகான சித்திரமும் வரையலாம், ஆக்ரோஷமான ரத்தம் வழியவும் எடுக்கலாம். எது நடந்தாலும் படம் ஓடணும். பான் இந்தியா படம் என்பதால் வன்முறையை கூட்டாமல் இருந்தால் சரி.

  English summary
  Produced by Satya Jyoti Films Thiagarajan and directed by Arun Matheswaran, Dhanush starrer 'Captain Miller' started with pooja today. Dhanush's film career is thriving despite a setback in his personal life this year. While films like Gray Man, Thiruchirtambalam and Nane Varavane were released and received well, he has also started shooting for his next film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X