கேப்டன் மில்லர் தனுஷுக்கு வந்த சோதனை... இது என்ன குரூப்ல டூப்பா..? ஷாக்கிங் அப்டேட்!
சென்னை: தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த மாதம் 17ம் தேதி வெளியாகி 100 கோடி வசூலித்தது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் தனுஷ்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.
கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.

கேப்டன் மில்லர் ஷூட்டிங்
தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வாத்தியின் சக்சஸால் உற்சாகமான தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ்
ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் தான் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். பீரியட் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தென்காசி பகுதிகளில் நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்காக வின்டேஜ் லுக்கில் செட் போட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ் வெளியாகியிருந்தது.

குரூப்ல டூப் ரவுண்டா இது?
தனுஷுடன் ஜோடியாக பிரியா பவானி சங்கர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோரும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஏராளமான லாங் ஷாட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கொஞ்சம் ரிஸ்க்கியான ஸ்டண்ட் சீன்ஸும் இருக்கிறதாம். அதனால், சில காட்சிகளில் தனுஷுக்கு பதிலாக டூப் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். இதற்காக தனுஷ் போன்றே ஹேர் ஸ்டைலில் உள்ள இரண்டு துணை நடிகர்கள் கேப்டன் மில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வலம் வருவதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் பிஸி ஷெட்யூல்
தனுஷ் பொதுவாகவே அவரது படங்களில் டூப் போட்டு ஷூட் நடத்த ஓக்கே சொல்லமாட்டாராம். அதிபயங்கரமான சண்டைக் காட்சிகளில் கூட ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஆனால், வாத்தி படத்தின் ப்ரோமோஷன் இருந்ததால் தான் கேப்டன் மில்லரில் அவர் நடிக்க வேண்டிய லாங் ஷாட் காட்சிகளுக்கு டூப் போட்டு எடுக்க க்ரீன் சிக்னல் கொடுத்தாராம். அதேபோல், இந்தப் படத்தில் பைக் சேஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் சில இடங்களில் டூப் போட வேண்டிய அவசியம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தனுஷின் வேற லெவல் ஆக்ஷன் சீன்ஸ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











