Captain Miller VS Ayalaan: அயலான் VS கேப்டன் மில்லர்... பொங்கல் வின்னர் யாருன்னு தெரியுமா..?

சென்னை: இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படங்கள் வெளியாகின. இதனால் தனுஷ் VS சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்தன. ஆரம்பத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை கேப்டன் மில்லர் தக்க வைத்துள்ளதா என்பதை பார்க்கலாம்.

கேப்டன் மில்லர் VS அயலான் பாக்ஸ் ஆபிஸ்: சிவகார்த்திகேயனின் ஆரம்பகால சினிமா கேரியரில் அவருக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் தனுஷ். அப்போது முதல் இருவருமே நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். ஆனால், சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்ட பின்னர் அவருக்கும் தனுஷுக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் இருவரது படங்களும் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியுள்ளன.

 Captain Miller VS Ayalaan: Captain Miller VS Ayalaan Box Office Report in Pongal Release

அதன்படி, தனுஷின் கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ஜன.12ம் தேதி பொங்கல் ரேஸில் ஒன்றாக களமிறங்கின. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர், பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனின் அயலான், சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கான படமாக வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் கன்னட சூப்பர் சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதல் நாளில் சூப்பரான ஓபனிங் கிடைத்தது. அதன்படி முதல் நாள் 8.80 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 7.45 கோடியும், மூன்றாவது நாளில் வசூல் இன்னும் குறைந்து 7.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், நான்காவது நாளில் 6.62 கோடியும், ஐந்தாவது நாளில் 4.50 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனடிப்படையில் கேப்டன் மில்லர் இதுவரை 35 கோடி ரூபாய் வரை மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது. ஆனால், இந்த வசூல் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. அதேநேரம் முதல் நாளில் கேப்டன் மில்லரை விட வசூலில் பின்தங்கியிருந்தது அயலான்.

அடுத்தடுத்த நாட்களில் அயலான் வசூல் பிக்-அப் ஆனதால், ஒருகட்டத்தில் கேப்டன் மில்லரை ஓவர்டேக் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது. இதனிடையே அயலான் வசூல் குறித்து படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டது அயலான். இதனால் தற்போதைய நிலவரப்படி அயலான் தான் கோலிவுட்டில் பொங்கல் வின்னர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் கேப்டன் மில்லர் வசூல் குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X