நடுவானில் ரஜினி, கமல் பட நடிகருக்கு மாரடைப்பு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
Recommended Video

மஸ்கட்: அமெரிக்காவுக்கு சென்ற நடிகர் கேப்டன் ராஜுவுக்கு விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் கேப்டன் ராஜு(67). அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கிளம்பினார்.
நடுவானில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஓமனில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

மருத்துவமனை
கேப்டன் ராஜு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

500 படங்கள்
கேப்டன் ராஜு மலையாள திரையுலகில் பிரபலமானவர். அவர் சுமார் 500 மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் ஆகியோரின் படங்களிலும் நடித்துள்ளார்.

படங்கள்
நடிப்பு தவிர அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். காட்டன் மேரி என்ற ஆங்கில படத்திலும் நடித்திருக்கிறார்.

ராணுவம்
1981ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகும் முன்பு ராஜு 5 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அவர் ராணுவத்தில் கேப்டன் அளவுக்கு உயர்ந்தவர். அதனால் தான் இன்று வரை கேப்டன் ராஜு என்றே அழைக்கப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











