தனுஷ் குடும்பத்திற்கும் மறக்க முடியாத உதவி செய்த கேப்டன்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: கேப்டன் விஜயகாந்த் நடிகர் தனுஷின் குடும்பத்திற்கும் மறக்க முடியாத உதவி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. இதையடுத்து நலம் பெற்று வீடு திரும்பிய விஜயகாந்த் மீண்டும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதரின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று,கட்சி அலுவலகத்தின் வாசலில் கோடான கோடி மக்கள் கதறி அழுதபடி குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த்: இதையடுத்து, தீவுத்திடலில் அலைகடல் என தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து பிற்பகல் 2.30 மணி அளவில் விஜயகாந்தின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. வழி எங்கும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக இருந்தால், 4.45 மணிக்கு தொடங்க வேண்டிய சடங்கு 6 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடவுளுக்கு நிகரானவர்: விஜயகாந்தின் மறைவை தாக்கிக் கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் பலர் அவரை நினைவு கூர்த்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் அக்கா கார்த்திகா தேவி இன்ஸ்டாகிராமில் விஜயகாந்தின் போட்டோவை ஷேர் செய்து. அதில், மனிதர்களுக்கு உதவி செய்வதில் கடவுளுக்கு நிகரானவர். எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதர். மனித நேயம் என்று வரும்போது முற்றிலும் ரத்தினமாக மின்னினார். கனவுகளை நனவாக்க உதவியைப் பெற்ற எத்தனையோ குழந்தைகளில் நானும் ஒருத்தி. அவரால், எம்பிபிஎஸ் ஆனானேன், கேப்டனிடம் இருந்து எனக்கு சரியான நேரத்தில் உதவி கிடைத்தது என்று பதிவிட்டுள்ளார்.
மறக்க முடியாத உதவி: தனுஷின் அக்கா கார்த்திகா தேவி பிளஸ் டூ முடித்துவிட்டு டாக்டர் படிக்க நினைத்தாராம். ஆனால் கட் ஆப் 1 மதிப்பெண் குறைந்ததால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க பணம் இல்லாததால், படிக்க வைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் கஸ்தூரி ராஜா. இந்த நேரத்தில் தான் கஸ்தூரி ராஜா வீட்டிற்கு விஜயகாந்த் வந்திருக்கிறார். அப்போது தனுஷின் அக்கா கார்த்திகா தேவி அழுதுகொண்டிருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்டாராம். விஷயத்தை சொன்னதும், உடனே கிளம்பிய கேப்டன் நேராக போரூர் ராமச்சந்திரா கல்லூரியில் பேசி மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்துவிட்டு தான் போனாராம். தனுஷின் அக்காவை டாக்டர் ஆக்க அந்த நாள் முழுவதும் அவர்கள் உடனேயே இருந்து சீட் உறுதியான பிறகு தான் கிளம்பி சென்றாராம் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications











