Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி... தனுஷின் கேப்டன் மில்லர் படக்குழு நெகிழ்ச்சி

சென்னை: கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. தனுஷ், சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழுவினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்துக்கு கேப்டன் மில்லர் படக்குழு அஞ்சலி: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், கிச்சா சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொங்கல் ரேஸில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக அயலான் படம் வெளியாகிறது.

 Captain Vijayakanth: Captain Millers crew paid tribute to Vijayakanth at the audio launch

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், தனுஷுடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் சிவராஜ்குமார், ப்ரியங்கா மோகன், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் படக்குழு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் உயிரிழந்த விஜயகாந்துக்கு ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா தொடங்கும் முன்னரே விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியது அங்கிருந்த ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. முன்னதாக விஜயகாந்து மறைவுக்கு தனுஷ் இறுதி அஞ்சலி செலுத்த போகாமல் இருந்தது கடும் சர்ச்சையானது. இதனை தனுஷின் ரசிகர்களே விமர்சித்திருந்தனர்.

 Captain Vijayakanth: Captain Millers crew paid tribute to Vijayakanth at the audio launch

தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். இதுகுறித்து தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். அப்பேற்பட்ட மனிதனுக்கு தனுஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதன்பின்னரும் கூட விஜயகாந்த் நினைவிடத்தில் தனுஷ் நேரில் சென்று மரியாதை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பலரும் தனுஷின் இந்த செயலை கண்டித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய், இளையராஜா, சரத்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X