குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய விஜயகாந்த்.. வைரலானது குடும்ப புகைப்படம்!

சென்னை : கேப்டன் விஜயகாந்த் தீபாவளியை தனது குடும்பத்தாருடன் கொண்டாடியவாறு எடுத்துக் கொண்ட புகைப்படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எண்ணற்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலுடன் பேசக்கூடிய பண்புள்ள விஜயகாந்த் தீபாவளியில் புத்தாடை அணிந்து குடும்பத்தாருடன் மத்தாப்பூ சுற்றியவாறு எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையுலகை ஆண்டு

திரையுலகை ஆண்டு

ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரண்டு உச்ச நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகை ஆண்டு வந்த சமயத்தில் அவர்களுக்கே போட்டியாக தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவையே மிரள வைத்தவர் நடிகர் விஜயகாந்த்.

நிலைத்து நிற்க

நிலைத்து நிற்க

சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் இன்று திகழ்ந்து வரும் விஜயகாந்த் திரைத் துறையில் ஆற்றிய தொண்டு இன்று வரை இவரது பெயரை நிலைத்து நிற்க வைத்துள்ளது.

ஆக்சன் ஹீரோவாக

ஆக்சன் ஹீரோவாக

கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள், சேதுபதி ஐபிஎஸ், செந்தூரப்பூவே, வானத்தைப்போல, நரசிம்மா என எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரும்பாலான போலீஸ் கதாபாத்திரங்கள் இவரை ரசிகர்களிடையே ஆக்சன் ஹீரோவாக மாற்றியது.

நம்பிக்கையான அரசியல்வாதி

நம்பிக்கையான அரசியல்வாதி

அனைவரையும் உருக வைக்கும் நடிப்பு, பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் என சினிமாவை கலக்கி வந்த விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்கி தமிழ் மக்களின் நம்பிக்கையான அரசியல்வாதியாகவும் மாறினார்.

அரசியலில் வெற்றி

அரசியலில் வெற்றி

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பேசக்கூடிய பண்புள்ள விஜயகாந்த் அரசியலில் வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வெள்ளந்தி சிரிப்புடன்

வெள்ளந்தி சிரிப்புடன்

தீபாவளி, பொங்கல் என எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் தன்னைப் போலவே தன்னை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணக் கூடிய விஜயகாந்த் அனைவருக்கும் பண்டிகை நாட்களில் உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தீபாவளி அன்று பச்சை நிற பட்டு சட்டை மற்றும் பட்டு வேஷ்டி அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக வெள்ளந்தி சிரிப்புடன் குடும்பத்துடன் மத்தாப்பு சுற்றியவாறு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த குடும்ப புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து அதைப் பார்த்த ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்து வர இந்த அழகான குடும்பப் போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X