»   »  இனிமே "கேப்டன்" நேரம்தான்..!

இனிமே "கேப்டன்" நேரம்தான்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 64 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு அவரது பிறந்தநாளை சமூக வலைதளங்களில் சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர் அவரது ரசிகர்கள், யாருமே நினைத்துப் பார்க்காத அளவிற்கு ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருந்தது #hbdcaptain ஹேஷ்டேக்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் கேப்டனின் அரசியல் மற்றும் அவரது திரையுலக ஆசைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பாடல்களில் ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்

இனிமேலும் நல்ல நேரம்தான்

பொன்மனச் செல்வன் படத்தில் இடம்பெறும் "இனிமேல நல்ல நேரம்தான்" பாடலும் விஜயகாந்தின் அரசியல் மற்றும் திரை வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஒரு பாடல் தான்.கேப்டனுக்கு இனிமேல நல்ல நேரம் தான்....

ஏலே இமயமலை

தவசி படத்தில் இடம்பெற்ற "ஏலே இமயமலை எங்க ஊரு சாமிமலை" பாடலையும் இந்த வரிசையில் சேர்க்கத்தான் வேண்டும், ஏனெனில் நான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்குவேன் என்று அந்தப் படத்தில் சிம்பாலிக்காக சொல்லியிருந்தார்.

சின்னக்கவுண்டர்

சின்னக் கவுண்டர் படத்தில் இடம்பெற்ற "கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே உமக்கு சுத்திப் போட வேண்டுமையா சின்னக் கவுண்டரே" என்ற பாடல் அரசியலுக்கு மட்டுமல்ல இன்றைய கொண்டாடத்திற்கும் ஏற்ற பாடலாக மாறியிருக்கிறது. இன்னைக்கு ஊர் கண்ணே உங்க மேலதான் இருக்கு அதனால வீட்டில சுத்திப் போட சொல்லுங்க கேப்டன்.

அந்த வானத்தைப் போல

"அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியைப் போன்ற குணம் படைத்த தென்னவனே" இன்று பெரும்பாலான ரசிகர்கள் கேப்டனிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது இந்தப் பாட்டு வரிகளைக் கொண்டுதான்.

மருமகளே மருமகளே

எங்க மொதலாளி படத்தில் இடம்பெற்ற மருமகளே மருமகளே பாடல் 93 ம் ஆண்டு இப்படம் வெளிவந்ததில் இருந்து இன்று வரை, பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்கு தமிழர்களின் திருமணங்களில் இரண்டறக் கலந்த பாடலிது.

இதைப் போன்ற இன்னும் ஏராளமான பாடல்கள் வரிகளைக் கொண்டு கேப்டனை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

English summary
Vijayakanth Evergreen Song List.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil