மகனின் பிறந்த நாளில் வெளியான விஜயகாந்த் புகைப்படம்… எப்படி இருக்காருனு நீங்களே பாருங்க !
சென்னை : நடிகர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார்.
ஆக்ஷன் காட்சிகளிலும், வசன உச்சரிப்பிலும் இவரை மிஞ்ச வேறு நடிகரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலவெற்றிப் படங்களில் நடித்து இருப்பார் விஜய்காந்த்.

நடிகர் விஜயகாந்த்
நடிகர் சங்கத்தில் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த விஜயகாந்த், 2005 ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி தீவிர அரசியலில் இறங்கினார். அரசியல்வாதியாகவும் திகழ்ந்த விஜயகாந்த், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

வருத்தப்பட்ட ரசிகர்கள்
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்காந்த் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் முன்பை போல அவரை பார்க்க முடிவதில்லை. சமீபத்தில் விஜய்காந்தின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் ஆளே அடையாளம் தெரியாதது போல உடல் எடை இளைத்து காணப்பட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அதில், சிவப்பு நிறத்தில் டீ ஷர்ட் மற்றும் கூலிக் கிளாஸ் அணிந்து கொண்டு இருமகன்களின் தோளிலும் கைப்போட்டுக்கொண்டு சிரித்த முகத்துடன் நிற்கிறார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தேறி வருகிறார்
இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் ஓரளவு தெளிவாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதை இந்த புகைப்படங்கள் நிரூபிப்பதாகவும், மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்

உறுதிப்படுத்தவில்லை
மேலும் நடிகர் விஜய்காந்த், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி லீட் ரோலில் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பவர்ஃபுல்லான கேரக்டர் ஒன்றில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால், அந்த தகவலை விஜய்காந்தின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை


Click it and Unblock the Notifications











