தொடக்கூடாத இடத்தில் கைவைத்த ரவுடிஸ்... வெளுத்து வாங்கிய கேப்டன்... விஜயகாந்தின் ரியல் ஆக்ஷன்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் கேப்டன் விஜயகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
80, 90களில் தனது ஆக்ஷனால் மிரட்டிய விஜயகாந்த், ரியல் லைஃப்பிலும் ஹீரோவாகவே வலம் வந்தார்.
திரையுலகில் விஜயகாந்தால் வாழ்க்கைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ரொம்பவே பெரியது.
அதேபோல், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் விஜயகாந்த் மாஸ் காட்டிய சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

செந்தூர பூவே படப்பிடிப்பு
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் 1980களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக உருவாகத் தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்குமே டஃப் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். 1979ல் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்தின் கேரியரில் செந்தூர பூவே திரைப்படம் மிக முக்கியமானது. விஜயகாந்த் மாஸ் ஹீரோவாக தன்னை நிரூபித்துக் கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில், அவரது சண்டைக் காட்சிகள் ரசிகர்களை வசீகரித்தது. சினிமாவுக்காக மட்டுமின்றி ஒருமுறை படப்பிடிப்பிலும் ரியலாகவே சம்பவம் செய்துள்ளார் விஜயகாந்த்.

கை வைத்த ரவுடிஸ்
1988ம் ஆண்டு வெளியான செந்தூர பூவே திரைப்படத்தில் கேப்டன் செளந்திர பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விஜயகாந்த். அவருடன் ராம்கி, ஸ்ரீப்ரியா, நிரோஷா, செந்தில், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்தனர். ஆபாவாணன் இயக்கிய இந்தப் படம் மரண மாஸ் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் நடைபெற்றுள்ளது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர், காமெடி நடிகர் செந்திலிடம் வம்பிழுத்துள்ளனர்.

ரியல் ஆக்ஷன் ட்ரீட்
அது செந்தூர பூவே படத்தின் படப்பிடிப்பு என்றும் தெரியாமல் செந்தில் மீது கை வைத்துள்ளனர். முக்கியமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்தும் இருக்கிறார் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லையாம். இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த், ஒருகட்டத்துக்கு மேல் நேரடியாக சீனில் வந்துள்ளார். படத்தில் வில்லன்களுக்கு வாய்ப்பு கொடுப்பது போல ரவுடிகளுக்கும் வார்னிங் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் அடங்குவதாக தெரியவில்லை. இதனால், பொறுமையிழந்த கேப்டன், செந்திலிடம் வம்பிழுத்தவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து விரட்டி விரட்டி வெளுத்து வாங்கியுள்ளார்.

மிரண்டு போன படக்குழு
விஜயகாந்தின் ரியல் ஆக்ஷன் அவதாரத்தை பார்த்து செந்தூர பூவே படக்குழுவினரே மிரண்டு விட்டார்களாம். ஒருவழியாக அடி வாங்கிய கும்பல் விட்டால் போதும் என தலைதெறித்து ஓட, அதன்பிறகே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் பல இடங்களிலும் நடிகர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் களத்தில் இறங்கிவிடுவாராம் கேப்டன். யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் கேப்டன் சப்போர்ட் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஷாம் நெகிழ்ச்சி
சில வாரங்களுக்கு முன்பு கூட விஜயகாந்தால் தான் காப்பற்றப்பட்டது குறித்து நடிகர் ஷாம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார். அதாவது அவர் நடித்த படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் சம்பளம் கொடுக்காமல் ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளார். உடனடியாக விஜயகாந்தை தொடர்புகொண்ட ஷாம், விசயத்தைக் கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அந்த தயாரிப்பாளருக்கு போன் போட்ட விஜயகாந்த், இனி இது என் பிரச்சினை, ஒழுங்கா தம்பி ஷாம்க்கு சம்பளம் கொடுத்துடணும் என ஒருபோடு போட்டுள்ளார். இதனை குறிப்பிட்ட ஷாம், இன்று தான் உயிரோடு இருப்பதற்கே கேப்டன் விஜயகாந்த் தான் காரணம் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications