நாற்காலியில் இருந்து சரிந்த விஜய்காந்த்..கேப்டனை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள்.. இயக்குநர் வேதனை!
சென்னை: கேப்டன் விஜயகாந்தை ஏன் கஷ்டப்படுத்துறீங்க என்று இயக்குநர் பாண்டிராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.
விஜயகாந்தை மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
கேப்டன் விஜயகாந்த்: இந்நிலையில், கடந்த மாதம் விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.

நாற்காலியில் இருந்து சரிந்த விஜய்காந்த்: இதையடுத்து 14ந் தேதி தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் வொய்ட் அன்ட் வொய்ட்டில், மாஸ்க், கூலர்ஸ் அணிந்தபடி ரோலிங் சேரில் அமர்ந்திந்தார். விஜயகாந்த் ரோலிங் சேரில் அழைத்து வரப்பட்டதை பார்த்த தொண்டர்கள் கதறி அழுதனர். வீல் சேரில் அமர்ந்து இருந்த விஜயகாந்த் திடீரென சரிந்து விழ நேர்ந்தது, இதைப்பார்த்த நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
கஷ்டப்படுத்தாதீர்கள் please: இந்த வீடியோவை பார்த்து வேதனை அடைந்த இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,'கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . இப்பொழுது பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please ... பிடித்த ஒரு 'நல்ல மனிதரை ' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு' என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்
பிரேமலதா சரியான பதிலடி: இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த, பிரேமலதா எதைப் பத்தி வேனா, என்ன வேனா பேசலாம்னு கிடையாது. கட்சிக்காரங்க எல்லாரும் கடும் கோபத்தில் இருக்காங்க. கட்சிக்காரங்க பத்திக்கும். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் எப்படி அவரை பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டிராஜ் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











