GOAT: முதல் சீனிலேயே கேப்டன் விஜயகாந்த் என்ட்ரியா?.. கோட் படம் பற்றி கசிந்த தகவல்!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகிறது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தை விட பலமடங்கு வசூலை கோட் திரைப்படம் கொடுக்கும் என்கிற நம்பிக்கை உறுதியாக உள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு ஏகப்பட்ட முன்னணி நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்த நிலையில், அனைத்து விஷயங்களையும் தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு தடையும் சொல்லாமல் செய்து கொடுத்துள்ளது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி அமரன், வைபவ் என ஏகப்பட்ட நடிகர்களை நடிக்க வைத்த நிலையில், கூடுதலாக விஜயகாந்த் கேமியோவையும் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்த காத்திருக்கிறது கோட் திரைப்படம்.
பெரிய பட்ஜெட்: நடிகர் விஜய்யின் சம்பளம் உட்பட படத்தில் நடித்துள்ள அத்தனை முன்னணி நடிகர்களுக்கான சம்பளம், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஜயகாந்த், டீஏஜிங் விஜய் என பல கோடிகளை கொட்டி மிகப்பெரிய பட்ஜெட்டில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. படத்தின் வியாபாரம் மற்றும் ஓவர்சீஸ் விற்பனையே தங்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.
வெங்கட் பிரபு கான்ஃபிடன்ட்: கோட் திரைப்படம் நிச்சயம் தளபதி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஏமாற்றாது என்கிற நம்பிக்கையை இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார். அதற்காக படத்தில் ஏகப்பட்ட வேலைகளை பல நாட்கள் தூங்காமல் கொள்ளாமல் கடுமையான உழைப்பைக் கொட்டி எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
மோகன்லால் கேமியோ?: விஜயகாந்த், சிவகார்த்திகேயன், த்ரிஷா உள்ளிட்டோர்களின் கேமியோ இந்த படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி சமீபத்தில் மோகன்லால் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், மோகன்லால் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
முதல் காட்சியிலேயே விஜயகாந்த்?: கோட் படம் இன்னும் 6 நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்தின் கேமியோ காட்சி ஒரு அனல் பறக்கும் சண்டைக்காட்சியில் இடம் பெறும் என்கிற தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது செப்டம்பர் 5-ஆம் தேதி படம் வெளியானதும் தெரிந்து விடும். முதல் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்த் மற்றும் தளபதி விஜய் திரையில் தோன்றினால் ரசிகர்களுக்கு அதைவிட மிகப்பெரிய ட்ரீட் இருக்காது என்ன ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications