Vijayakanth: சந்தன பேழையில் விஜயகாந்த் உடல்.. இறுதி மரியாதை செய்த அரசியல் தலைவர்கள்!
சென்னை: நடிகரும் தேமுதிக கட்சி நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் காலமான நிலையில் அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். நேற்றைய தினம் தேமுதிக அலுவலகத்திலும் தொடர்ந்து இன்று அதிகாலையில் தீவுத்திடலிலும் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல், இன்று பிற்பகலில் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள், சாலையின் இருமருங்கிலும் காத்திருந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனால் ஊர்வலம் மிகவும் மெதுவாகவே நடந்தது. இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டது. இதையடுத்து அரசியல்கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

விஜயகாந்த் மறைவு: நடிகர் விஜயகாந்த் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரது உடல் நேற்றைய தினம் தேமுதிக அலுவலகத்திலும் இன்று அதிகாலை தீவுத்திடலிலும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி உள்ளிட்டவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் தங்களின் மனதிற்கு நெருக்கமான தலைவனின் முகத்தை இறுதியாக பார்த்து தங்களை தேற்றிக் கெண்டனர்.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி: நேற்றைய தினம் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியதால் அதிகமான நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் சென்னை தீவுத்திடலுக்கு இன்று அதிகாலையில் மாற்றப்பட்டது. தொடர்ந்து அங்கும் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தீவுத்திடலில் இருந்து அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் கண்ணீருடன் கேப்டனுக்கு பிரியா விடை கொடுத்ததை பார்க்க முடிந்தது.

சந்தன பேழையில் விஜயகாந்த் உடல்: இந்நிலையில் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு அவரது மகன்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். இதையடுத்து விஜயகாந்தின் உடல் அவருக்காக தயாரிக்கப்பட்ட சந்தன பேழையில் வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவக்ள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். முதல்வர் முக ஸ்டாலினும் இறுதி மரியாதை செலுத்தினார். இறுதியாக அவரது கைகளை பற்றி அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுததை பார்க்க முடிந்தது. அவரது மகன்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

விளக்குகளை ஒளிரவிட்ட ரசிகர்கள்: தேமுதிக அலுவலகத்தின் முன்பும் கோயம்பேடு மேம்பாலத்திலும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் தற்போது குவிந்துள்ளனர். அவர்கள் தங்களது கைகளில் உள்ள செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு கேப்டனுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். முன்னதாக 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











