உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி...விஜய்காந்த் மகனின் புது முயற்சி!

சென்னை: உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியை கேப்டன் விஜய்காந்தின் மகன் விஜய் பிரபாகரன் நடத்த உள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இவருக்கு பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறார்.

Captain Vijayakanths son Vijaya Prabhakaran is gearing up for his hip hop revolution

"The Final Lap Tour 2023: சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசை கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியானது 50 சென்ட்டின் Get Rich or Die Tryin ஆல்பத்தின் 20வது ஆண்டு விழாவை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெற உள்ளது.

50 சென்ட் ஜாக்சன்: நேரடி பொழுதுபோக்கு, திரைப்பட தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் வி.ஜெ.பி. (VJP) மற்றும் டராக்டிகல் (Tracktical) கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து 50 சென்ட்டின் வரலாறு, பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்கள் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் இடம்பிடித்தது: இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர். தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட Get Rich or Die Tryin மிகப்பெரிய அளவில் பிரபலமாக மூலை முடுக்கு எங்கும் சென்று, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது. இந்த ஆல்பம் இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. இந்த ஆல்பத்தில் உள்ள "In da club," "p.i.m.p," மற்றும் candy shop போன்ற பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Captain Vijayakanths son Vijaya Prabhakaran is gearing up for his hip hop revolution

16 ஆண்டுகளுக்கு பின்: இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட், நான் இந்தியாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்திய பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறேன், என்று தெரிவித்தார்.

மாறுபட்ட தொடக்கம்: இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய விஜய பிரபாகரன், திரை மற்றும் கலை உலகில் எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன் எடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி கலை துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X