காவி வேட்டியில் சன்னியாசி போல இருந்தார்.. இப்படி நிலைமை வரும்னு கனவுலகூட நினைக்கல.. பிரேமலதா பேட்டி!

சென்னை: என் கணவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேட்டி ஒன்று உருக்கமாக பேசி உள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Captain Vijayakanths wife Premalatha Vijayakanth Emotional interview

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதல்வர் முக ஸ்டாலின், நடிகர் கமலஹாசன் என இணையத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரேமலதா பேட்டி: விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் கல்லூரியில் படிக்கும் போது, உழவன் மகன் படத்தைப் பார்த்துவிட்டு, விஜயகாந்தின் தீவிர ரசிகையாக இருந்தேன். அந்த நேரத்தல் தான் விஜயகாந்த் வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்தார்கள். என் வீட்டில் இருந்த பெரியவர்கள் பார்த்து செய்துவைத்த திருமணம் தான் இது. திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதற்கு எங்கள் திருமணமே ஒரு எடுத்துக்காட்டு.

Captain Vijayakanths wife Premalatha Vijayakanth Emotional interview

காவி வேட்டியில்: பெரிய நடிகர், வீட்டுக்கு பெண் பார்க்க வருகிறார், அவரை எப்படி வரவேற்பது என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருந்த போது, காலில் செருப்பு இல்லை, காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் மிகவும் எளிமையாக பெண் பார்க்க வந்தார். அவரின் எளிமையை பார்த்த என் அம்மா, என் பெண்னை இப்படிப்பட்ட ஒருவருக்குத்தான் கொடுப்பேன் என்று முடிவு செய்தார்.

பெற்றோர் தீர்க்கமாக இருந்தனர்: திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் எல்லாம், உறவினர்கள், சினிமா காரனுக்கு எப்படி பெண்னை கொடுப்பா என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனத்திற்கு எல்லாம், என் தாயும், தந்தையும் எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கு, என் மகளை நன்றாக பார்த்துக்கொள்வார் என்றார்கள் என்று தீர்க்கமாக இருந்து திருமணம் செய்து வைத்தார்கள்.

முதல் பரிசு: எங்களுக்கு ஜனவரியில் திருமணம் நடந்தது, மார்ச் மாதம் என் முதல் பிறந்த நாள் வந்தது, அதற்கு 'V' என்ற எழுத்துப்போட்ட டாலரை பரிசாக கொடுத்தார். என்னிடம் எத்தனையோ நகைகள் இருக்கிறது என்றாலும், என் கணவர் கொடுத்த அந்த பரிசை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்து இருக்கிறேன். நான் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய அவார்டு தான் அந்த பரிசு.

Captain Vijayakanths wife Premalatha Vijayakanth Emotional interview

நான் கனவில் கூட நினைக்கவில்லை: தொடர்ந்து பேசிய அவர், கேப்டனின் உடல்நிலை இப்படி ஆனதும் நான் மிகவும் உடைத்துவிட்டேன், ஒரு மனைவியாக நான் அவரை எப்படி எல்லாம் பார்த்து ரசித்து இருக்கிறேன். இப்படி ஒரு நிலைமை எங்கள் வாழ்க்கையில் வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. அவரது உடலில் பிரச்சனை வந்த உடனே, அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், துபாய் என அனைத்து நாடுகளுக்கும் அழைத்து சென்று அவருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்து இருக்கிறோம்.

கடவுளுக்கு நன்றி: கேப்டனுக்கு அம்மா இல்லாததால், அவர் என்னை ஒரு அம்மாவைப் போல பார்த்தார். அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டால் தான் பிடிக்கும் என்பதற்காக, இரவில் எத்தனை மணி ஆனாலும், விழுந்து இருக்கு அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன். இந்த ஜென்மம் மட்டுமில்லை இனிவரும் எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும் அவர் தான் என் கணவராக வரவேண்டும். இப்படி வாழ்க்கையை எனக்கு கொடுத்த என் கணவருக்கு மிகவும் நன்றி என்று அந்த பேட்டியில் பிரேமலதா மிகவும் உருக்கமாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X