»   »  கேப்டன் டீமை எதிர்த்து புது அணி

கேப்டன் டீமை எதிர்த்து புது அணி

Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விஜயகாந்த் அணியின்சார்பில் நிறுத்தப்படுபவர்களை எதிர்த்து நல்லதம்பி அணியின் சார்பில் வேட்பாளர்கள்நிறுத்தப்படவுள்ளனர்.

வெறும் நடிகர் சங்கமாக இல்லாமல், திமுக, அதிமுக நடிகர்கள் அடங்கிய சங்கமாகதென்னிந்திய நடிகர் சங்கம் திகழ்கிறது. சங்க நிர்வாகிகள் தேர்தல் நெருங்கிக்கொண்டுள்ளது.

இத் தேர்தலில் தங்களது பலத்தைக் காட்டவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இருகட்சிகளையும் சேர்ந்தவர்கள் மறைமுகமாக இறங்கியுள்ளனர். இதனால் நடிகர் சங்கதேர்தல் படு சூடாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதில் தலைவர் பதவிக்கு மீண்டும் விஜயகாந்த போட்டியிடும் வாய்ப்பில்லை என்றுதெரிகிறது. எனவே சரத்குமாரை தலைவராக்க முயற்சிகள் நடக்கின்றன.

இன்னொரு பக்கம் விஜயகாந்த் அணியின் சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும்அவர்களை எதிர்த்து ஆட்களை நிறுத்த போட்டி அணி முடிவு செய்துள்ளது.

தலைவர் பதவிக்கு நாசரை நிறுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் நாசர்பிடிகொடுக்காமல் உள்ளார்.

தற்போதைய நிலையில் சரத்குமார் தலைவர் பதவிக்கும் நெப்போலியன் செயலாளர்பதவிககும், விஜயக்குமார் துணைத் தலைவர் பதவிக்கும் நிறுத்தப்படலாம் எனத்தெரிகிறது.

முன்பு திமுகவில் இருந்த சரத்குமார், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி மற்றும்விஜயக்குமார், செந்தில் ஆகியோர் இப்போது அதிமுகவில் உள்ளனர். நெப்போலியன்திமுகவில் இருக்கிறார். தலைவர் விஜயகாந்த் தனிக் கட்சியின் தலைவராகவும்,அக்கட்சியின் எம்.எல்.ஏவாகவும் உள்ளார்.

செயற்குழு உறுப்பினரான நடிகர் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராகஉள்ளார்.

இப்படி நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்களாகஇருப்பதால், அரசியல் சார்பற்றவர்களே நர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று நாசர் உள்ளிட்ட நடுநிலை நடிகர்கள் கோரி வருகிறார்கள்.

நாசரின் கோரிக்கைக்கு மூத்த உறுப்பினரான நல்லதம்பி தலைமையிலான அணிஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த அணி, விஜயகாந்த் அணிக்கு கடும் எதிர்ப்பாக உள்ளது. விஜயகாந்த் அணிசார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை எதிர்த்து தங்களது தரப்பில் ஆட்களை நிறுத்தஇந்த அணி முடிவு செய்துள்ளது.

நல்லதம்பி அணிக்கு நாடக நடிகர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவாக உள்ளனர்.

இந்த அணி செயற்குழு உறுப்பினர் பதவியைத்தான் முக்கியமாக குறி வைத்துள்ளது.நடிகர் சங்கத்தின் முடிவுகளுக்கு செயற்குழுதான் ஒப்புதல் அளிக்க முடியும்.

அதிகபட்ச அதிகாரம் நிரம்பிய அமைப்பாக விளங்கும் செயற்குழுவில் புகுந்து விடநல்லதம்பி அணிமுடிவு செய்துள்ளது.

மொத்தம் உள்ள 30 உறுப்பினர் பதவிக்கும் ஆட்களை நிறுத்த நல்ல தம்பி அணிமுடிவு செய்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil