twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார் மோதி விபத்து: காயம் அடைந்தவர், அதிகாரிகளை குறை கூறும் நடிகை

    By Siva
    |

    Recommended Video

    சாலையில் சென்றவர் மீது கார் ஏற்றி விபத்து ஏற்படுத்திய நடிகை ரஷ்மி கவுதம்- வீடியோ

    விசாகப்பட்டினம்: சாலையில் சென்றவர் மீது கார் ஏற்றி விபத்து ஏற்படுத்தியது குறித்து நடிகை ரஷ்மி கவுதம் விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் ரஷ்மி கவுதம். அவர் கடந்த 17ம் தேதி இரவு படப்பிடிப்பில் இருந்து காரில் வீடு திரும்பியுள்ளார். அவரின் கார் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாகா பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற செய்யது அப்துல் என்பவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் காயம் அடைந்த செய்யது அப்தலு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நள்ளிரவில் தயாரிப்பாளரை வீடு புகுந்து தாக்கிய ஜோதிகா பட இயக்குநர் நள்ளிரவில் தயாரிப்பாளரை வீடு புகுந்து தாக்கிய ஜோதிகா பட இயக்குநர்

    போலீஸ்

    போலீஸ்

    சாலையை கடக்க முயன்றவர் மீது காரை ஏற்றியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஷ்மியின் கார் டிரைவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரஷ்மி விளக்கம் அளித்துள்ளார்.

    கார்

    கார்

    நெடுஞ்சாலையில் விளக்கே இல்லை. அப்பொழுது அந்த நபர் சாலையை கடக்க முயன்றார். துரதிர்ஷ்டவசமாக என் கார் அவர் மீது மோதியது. காரை நான் ஓட்டவில்லை. உடனே நானும், டிரைவரும் சேர்ந்து அந்த நபரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

    வீடியோ

    வீடியோ

    விபத்து நடந்த உடன் அங்கு கூடிய மக்கள் யாரும் உதவி செய்ய வரவில்லை. மாறாக அவர்கள் வைத்திருந்த செல்போனை எடுத்து போட்டோ, வீடியோ எடுக்கத் துவங்கிவிட்டனர். நான் தவறு எதுவும் செய்யாத நிலையில் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    மேம்பாலத்தை பயன்படுத்த சோம்பேறித்தனம்பட்டு நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் மீது குறை சொல்வதா இல்லை விளக்குகள் செயல்படாததை கண்டுகொள்ளாத அதிகாரிகளையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரஷ்மி கவுதம்.

    English summary
    Actress Rashmi Gautam has given explanation about the accident involving her car in Vishakapatnam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X