கார் விபத்தில் பெண் பலி.. மன அழுத்தத்தில் இருக்கிறேன்.. விளக்கம் கொடுத்த இர்ஃபான் !
சென்னை : யூடியூபர் இர்ஃபானின் கார் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், எதிர்பாராத இந்த விபத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக இர்பான் வேதனை தெரிவித்துள்ளார்.
உணவு விமர்சகர் இர்பான், உணவை ரசித்து சாப்பிடுவதையே தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானார்.
மே 14ந் தேதி இர்பானின் திருமணம் மிகவும் தடபுடலாக நடந்தது. இவர்கள் திருமணத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

கார் விபத்து : இதையடுத்து, கடந்த வாரம் இர்பானின் கார் செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் பகுதியில் பத்மாவதி என்ற 55 மதிக்கத்தக்க பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை இர்பானின் மச்சான் ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளக்க வீடியோ : இந்நிலையில், கார் விபத்து இர்ஃபான் விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், பல சேனல்களில் பல வதந்திகள் பரவி வருவதை பார்க்கும் போது உண்மையில் மனம் வேதனையாக இருக்கிறது. கடந்த வாரம் 25 மே அன்று, மருவீடு முடித்துவிட்டு தஞ்சாவூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம்.
அனைவரும் இருந்தோம் : என்னுடைய தங்கை, மனைவி, குழந்தைகள் காரில் வந்து கொண்டு இருந்தோம். காரை மச்சான் ஓட்டிக்கொண்டு வந்தார்,மறைமலை நகர் கிட்ட வரும்போது, சைடுல எல்லாம் பேரி கார்டு போட்டு இருந்தது. அப்போது திடீரென ஒரு அம்மா வந்து விட்டார். இந்த விபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மச்சான் வண்டியை திருப்பிய போதிலும், இந்த விபத்தை தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அந்த இடத்தில் கிராசிங் இல்லை, வெளிச்சம் கூட அங்கு இல்லை. அதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே எங்களுக்கு புரியவில்லை.
மன அழுத்தத்தில் : திருமணம் ஆன 10 நாளில் இப்படி ஒரு பிரச்சனையால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறோம். காரில் ஏறவே எனக்கு பயமாக இருக்கு. எனக்கே இவ்வளவு வலி என்றால், அந்த பெண்ணை இழந்த குடும்பத்தினர் எவ்வளவு வருந்தி இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாக புரிகிறது.
பொய்யான செய்தி : இந்த வீடியோவின் மூலம், முதலில் அவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குடும்பத்திற்கு என்னால் என்ன செய்ய முடியுமே அதை நான் செய்வேன். மேலும் விபத்து குறித்து வரும் செய்தி வேதனை அளிக்கிறது. நான் வருத்தப்படவேண்டும், எப்போடா எதாவது நடக்கும் என்று காத்துக்கொண்டு இருந்தது போல பலரும் வாய்க்கு வந்தபடி செய்தி வெளியிட்டு வருகிறார் என்று இர்பான் கவலையுடன் அந்த வீடியோவில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











