என்னை ஏமாற்றிவிட்டார்.. கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் பரபரப்பு புகார்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: பிரபல கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல கவர்ச்சி நடிகை முமைத் கான், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். முன்னணி ஹீரோ படங்களிலும் நடித்துள்ளார்.

சிக்கிமுக்கி நெருப்பே

சிக்கிமுக்கி நெருப்பே

கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே, சிக்கி முக்கி நெருப்பே, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மம்பட்டியான், மறந்தேன் மன்னித்தேன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கார் டிரைவர் புகார்

கார் டிரைவர் புகார்

கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருக்கும் முமைத்கான், இசை ஆல்பம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை முமைத் கான் தனக்குத் தர வேண்டிய 15000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ராகவா ராஜூ என்பவர் புகார் கூறியுள்ளார்.

வாடகையை தரவில்லை

வாடகையை தரவில்லை

நடிகை முமைத் கான் கோவா செல்ல வேண்டும் என்று என் காரை புக் செய்தார். அங்கு 3 நாட்கள் இருக்க வேண்டும் என்றார். சென்றேன். பின்னர் மூன்று நாட்களை 8 நாட்கள் ஆக்கினார். ஆனால், தனக்கு தர வேண்டிய வாடகை பணமான, 15000 ஆயிரம் ரூபாயைத் தரவில்லை என்று கூறியுள்ளார்.

எதிர்பார்த்தேன்

எதிர்பார்த்தேன்

இதற்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திய ரசீதுகள், ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளார். கோவா ட்ரிப் முடிந்ததும் பணத்தை தருவார் என்று எதிர்பார்த்தேன். தராமல் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

Recommended Video

Bigg Boss -ல் கலந்துகொண்ட Kasthuriகு Vijay Tv நாமம் | Bigg Boss Tamil
பாதிக்கப்படக் கூடாது

பாதிக்கப்படக் கூடாது

தன்னைப் போல் மற்றொரு டிரைவர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை சொல்வதாகவும் ராஜூ கூறியுள்ளார். இதற்கு நடிகை இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. நடிகை முமைத்கான் மீது டிரைவர் ஒருவர் கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X