நடிகை ஹேமாஸ்ரீயை ஒரு வேளை கார் டிரைவர் கொன்றிருப்பாரோ?
பெங்களூர்: கன்னட டிவி நடிகையை அவரது கார் டிரைவர் கொன்றிருக்கலாம் என்ற புதிய சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளதாம்.

காயத்துடன் பிணமாகக் கிடந்த ஹேமாஸ்ரீ
கன்னட டிவி நடிகையான ஹேமாஸ்ரீ உடலில் காயங்களுடன் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் பிணமாகக் கிடந்தார். இதுதொடர்பாக அவரது கணவர் சுரேந்திர பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடித்து பின்னர் கொலையா?
ஹேமாஸ்ரீயை பண்ணை வீட்டுக்குக் கூட்டிச் சென்று அங்கு வைத்து சரமாரியாக அடித்து பின்னர் சுரேந்திர பாபு கொலை செய்திருக்கலாம் என்பது போலீஸாரின் சந்தேகம்.

போனில் சிக்கிய ஆந்திர அமைச்சர்
சுரேந்திர பாபுவிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து ஆராய்ந்த போலீஸார், அதில் ஆந்திர அமைச்சர் ஒருவர் பலமுறை பேசியதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அமைச்சருக்குத் தொடர்பு இருக்கலாமோ என்ற இன்னொரு சந்தேகமும் எழுந்தது.

கார் டிரைவர் சதீஷைக் காணோம்
இந்த நிலையில் சுரேந்திர பாபுவின் கார் டிரைவர் சதீஷ் என்பவரை கொலை நடந்ததற்குப் பிறகு யாரும் பார்க்கவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

குளோரோபார்ம் கொடுத்தேன்.. சுரேந்திர பாபு புதுத் தகவல்
இந்த நிலையில் போலீஸாரிடம் சுரேந்தரி பாபு கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஹேமாஸ்ரீக்கு குளோரோபார்ம் கொடுத்த மயக்க நிலையில்தான் அழைத்துச் சென்றேன். வழியில் அவருக்கு அடிக்கடி கொடுத்ததால் அவர் மரணமடைந்து விட்டார் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவர் சொல்வது உண்மையா என்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது என்று கூறுகிறது போலீஸ் தரப்பு


Click it and Unblock the Notifications











