'பேட்ட' படத்துக்காக விளம்பரம் செய்யும் கார் ரேஸ் வீரர்... மலேசியாவில் மரண மாஸ்!
பேட்ட படத்துக்காக மலேசியா நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கார் ரேஸ் வீரா தர்ஷன் ராஜ் பேட்ட படத்துக்காக மலேசியாவில் விளம்பரம் செய்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'பேட்ட'. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.
மலேசியாவில் இன்று மற்றும் நாளை நடைபெறும் "டிரிப்ட் சேலேஞ் 2018" (DRIFT Challenge 2018) கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார். மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

ரேஸ் காரில் "பேட்ட" படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications