வேற லெவல் போங்க நீங்க.. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸில் பிரபல பாடகி!
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபல ராப் பாடகி கார்டி பி இணைந்துள்ளார்.
லண்டன்: வின் டீசல் நடிப்பில் உருவாகி வரும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகம் இங்கிலாந்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் பிரபல ராப் பாடகி கார்டி பி நடிக்கவுள்ளார். கார்டி பியுடன் இருக்கும் வீடியோவை வின் டீசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த அறிவிப்வை வெளியிட்டுள்ளார்.

2001ம் ஆண்டு ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் முதல் பாகம் வெளியானது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் வின் டீசல் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களில் பயணிக்கிறார். அவருடன் ஆரம்பம் முதல் பயணித்து வந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர், கார் விபத்தில் உயிரிழக்க, வின் டீசல் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தார்.
தற்போது, டுவைன் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்டவர்களுடன் வின் டீசலுடன் இணைந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் பாகங்களுக்கு உயிர் ஊட்டி வருகின்றனர்.
கார் ரேசில் கலக்கும் இந்த படம், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் 9ம் பாகம் உருவாகி வருகிறது. பெரும்பாலான காட்சிகள் இங்கிலாந்தை சுற்றி எடுக்கப்பட உள்ளதால், வின் டீசல், லண்டனிலே முகாமிட்டுள்ளார்.
லண்டனில் செவ்வாய்கிழமையான நேற்று நடிகர் வின் டீசலை சந்தித்த கார்டி பி, அவருடன் இணைந்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார்.
மேலும், இந்த படத்தின் டைட்டில் டிராக் பாடலிலும் கார்டி பியின் பங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஹஸ்ட்லர் என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்ட்ரிப்பர் டைமண்ட் கதாபாத்திரத்தில் கார்டி பி நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தில் அவருக்கு பெரிய ரோல் எதுவும் இல்லை. இந்த படத்தில் கார்டி பிக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on InstagramLast day in the UK! Pa mi Gente... #Fast92020 #Fatherhood
A post shared by Vin Diesel (@vindiesel) on
கார்டி பியை போலவே லத்தின் இசை கலைஞரான ஒசுனாவும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9ம் பாகத்தில் இணைந்துள்ளார். இசை கலைஞர்கள் அதிகம் இடம் பெறுவதால், இந்த படத்தில் இசைக்கான முக்கியத்துவம் அதிகரித்து காணப்படும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6ம் பாகத்தை இயக்கிய ஜஸ்டின் லின் தான் 9ம் பாகத்தையும் இயக்கி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications











