»   »  பாலாஜி... நடத்துங்க, அவமான படுத்துங்க, சந்தோஷமாக இருங்க: லட்சுமி ராமகிருஷ்ணன்

பாலாஜி... நடத்துங்க, அவமான படுத்துங்க, சந்தோஷமாக இருங்க: லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி அளித்துள்ள பேட்டியை பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஏகத்திற்கும் கலாய்த்தார். இதனால் கோபம் அடைந்த லட்சுமி ட்விட்டரில் பாலாஜியை விளாசினார்.

இது குறித்து பாலாஜி தற்போது தான் பேசியுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனனிடம் என் செல்போன் எண் உள்ளது அவர் வேண்டுமானால் அழைத்திருக்க வேண்டியது தானே என்றார்.

 

போன்

பாலாஜியை ட்விட்டரில் திட்டுவதை விட அவருக்கு போன் செய்யலாமே மேடம் என ஒருவர் கேட்டதற்கு லட்சுமி கூறுகையில், அவரு என்ன கிண்டல் பண்ணுவாரு... நான் அவரை கூப்பிடணுமா? என்ன நியாயம் இது? என்றார்.

நடத்துங்க

நேரம்! வேற என்ன?! நடத்துங்க... அவமான படுத்துங்க... சந்தோஷமாக இருங்க என லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டார்ச்சர்

உயிரோட இருக்கும்போது டார்ச்சர் குடுப்பீங்க, செத்ததற்கப்புறம் அப்படி பண்ணினா இப்படி பண்ணினான்னு பேசுவீங்க என்று ட்வீட்டியுள்ளார் லட்சுமி.

யோசிங்க

ட்வீட் செய்யும் முன்பு சிந்தியுங்கள். நீங்கள் ஒரு கிரியேட்டர், இயக்குனர், நடிகை. நீங்கள் எப்படி எங்கள் பிரதர் பாலாஜியை குறை கூறலாம், யோசிக்காமல் ட்வீட் செய்வதை நிறுத்துங்கள் என ஒருவர் கூறியதற்கு லட்சுமி, உங்கள் பிரதர் ரொம்ப கிரேட்... நடத்துங்க என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Lakshmi Ramakrishnan is still in angry mood over RJ Balaji issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil