twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி வழக்கு.. விஷாலுக்கு தொடரும் சிக்கல்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    இரும்புத்திரை ரிலீஸுக்கு எதிராக சதி..வீடியோ

    சென்னை : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் விஷாலின் 'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    Case against Irumbuthirai release

    விஷால் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும், அர்ஜூன் வில்லனாகவும் நடித்துள்ள 'இரும்புத்திரை' திரைப்படத்தில் சைபர் வார் முக்கிய பிரச்னையாக பேசப்படுகிறது. தகவல் திருட்டு ஏற்படுத்தும் பாதிப்புகள் இப்படத்தில் காட்டப்படுகின்றன.

    "இரும்புத்திரை படத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் நலனுக்காக 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து இரும்புத்திரை படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்றிருப்பதை ஏற்க முடியாது.

    மேலும், இந்த காட்சிகளுடன் படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும். மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட நேரிடும். எனவே, அந்த காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்" என நடராஜனின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுன இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

    ஏற்கெனவே, இரும்புத்திரை படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செங்கல்பட்டு, சென்னை பகுதி வினியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி தடுப்பதாக வினியோகஸ்தர் பி.டி.செல்வகுமார் போலீஸில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A case filed against 'Irumbuthirai' release.The petition states that Aadhar card data scene displayed incorrectly and that scene should be prohibited to allow screening.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X