twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய வேண்டும்.. டிஜிபி அலுவலகத்தில் புகார்

    |

    சென்னை: இயக்குநர் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பழைய வண்ணாரப் பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்து ஆண்டு திரௌபதி படம் வெளியானது.

    இந்த முறை மிஸ் ஆகாது.. ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை’ ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?இந்த முறை மிஸ் ஆகாது.. ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை’ ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

    இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    நாடகக் காதலை தோலுரித்துக் காட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

    ரிச்சர்ட் ரிஷி ஹீரோ

    ரிச்சர்ட் ரிஷி ஹீரோ

    இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹிரோவாக நடித்திருந்தார். திரௌபதி படத்தில் சிலம்ப பயிற்சியாளராக அவர் நடித்திருந்தார்.

    வசூலை குவித்த திரௌபதி

    வசூலை குவித்த திரௌபதி

    50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

    இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜியின் அடுத்த படைப்பாக ருத்ர தாண்டவம் படம் உருவாகியுள்ளது.

     ருத்ர தாண்டவம் நடிகர்கள்

    ருத்ர தாண்டவம் நடிகர்கள்

    இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ராதா ரவி வழக்கறிஞராகவும், தம்பி ராமைய்யா, தீபா ஆகியோர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பரபரப்பை கிளப்பும் பல வசனங்கள்

    பரபரப்பை கிளப்பும் பல வசனங்கள்

    ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியானது. இதில் சமூகத்தில் நிலவும் மற்றொரு முக்கிய பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் மதமாற்றம், சாதி அரசியல் என பரபரப்பை கிளப்பும் பல வசனங்கள் ருத்ர தாண்டவம் படத்தில் இடம் பெற்றுள்ளது.

    பெரிய சம்பவம் இருக்கும் போல

    பெரிய சம்பவம் இருக்கும் போல

    ட்ரெயிலரை பார்த்த நெட்டிசன்கள் திரௌபதியை விட பெரிய சம்பவம் இந்தப் படத்தில் இருக்கும் போல என கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்

    கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் இந்த புகாரை அளித்துள்ளனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    படத்தை தடை செய்ய வேண்டும்

    படத்தை தடை செய்ய வேண்டும்

    மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இயக்குனர் மோகன் ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மோகன் ஜியின் திரௌபதி படத்திற்கும் இதுபோன்று புகார்கள் அளிக்கப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Case against Mohan G's Rudra Thandavam movie in DGP office. The complaint was filed by the Minority People's Welfare Party in DGP office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X