'பத்மாவதி' படத்துக்கு தடை கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட் அதிரடி! #Padmavati

By Vignesh Selvaraj

மும்பை : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது 'பத்மாவதி' என்ற சரித்திரப் படத்தை இயக்கி உள்ளார். இது இன்னொரு பாகுபலி என்று பேசப்படுகிறது.

சுமார் 200 கோடி ரூபாயில் தயாராகி உள்ளது. இஸ்லாமிய மன்னர் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளது.

இதில் பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு தடை

படத்திற்கு தடை

இந்த நிலையில் 'பத்மாவதி' படத்தில் மகாராணி பத்மாவதி பற்றிய தவறான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி ராஜபுத்திரர்கள் சார்பில் 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

தடை விதிக்க மறுப்பு

தடை விதிக்க மறுப்பு

இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூடன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசலீத்த அமர்வு படத்துக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது.

விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

அமர்வு நீதிபதிகள், 'திரைப்படத்தை நன்கு பரிசீலித்து தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கம் அளித்துள்ளார். இதனால் படத்தை தடைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்துள்ளனர்.

தடைகள் தாண்டி ரிலீஸ்

தடைகள் தாண்டி ரிலீஸ்

ஏற்கெனவே, பா.ஜ.க-வினர் இந்தப் படத்தைத் தடை விதிக்கவேண்டும் எனக் கோரியிருந்தனர். தற்போது வழக்கில் தடை விதிக்க மறுக்கப்பட்டிருக்கிறது. பல தடைகளைத் தாண்டி 'பத்மாவதி' வருகிற டிசம்பர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X