twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னர் சங்கர் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி! - உயர்நீதிமன்றம்

    By Shankar
    |

    Poponnar Shankar Movie
    சென்னை: பொன்னர் சங்கர் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை, ஆதாரமில்லாத, பொருத்தமற்ற வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.

    முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் கதையை தழுவி அதே பெயரில் தயாரிக்கப்பட்ட பொன்னர்-சங்கர் சினிமாவுக்கு தடை கேட்டு கோவையைச் சேர்ந்த எம்.லோகநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், "நான் கொங்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருக்கிறேன். பொன்னர்-சங்கர் என்ற அண்ணண்மார் சாமி எங்கள் குல தெய்வம். கொங்கு வேளாள கவுண்டர்கள், முத்தரையர்கள், நாயக்கர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் உட்பட பல சமுதாயத்தினர் அண்ணண்மார் சாமியை தெய்வமாக வணங்குகின்றனர்.

    14-ம் நூற்றாண்டில் இருந்தே அண்ணண்மார் சாமியை வணங்குவது தொடர்கிறது. புலவர் பிச்சை பட்டர் என்பவர் பொன்னர்-சங்கர் வரலாற்றை ஓலைச் சுவடிகளில் எழுதினார். அதை எழுத்தாளர் சக்தி கனல் என்பவர் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்.

    இதை 'குங்குமம்' என்ற பத்திரிகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி பொன்னர்-சங்கர் என்ற தலைப்பில் தொடராக எழுதினார். சக்தி கனல் எழுதிய கதைக்கும் அதற்கும் வேறுபாடு உள்ளது. தற்போது முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் கதையை அதே பெயரில் சினிமாவாக லட்சுமி சாந்தி மூவீஸ் நிறுவனமும், தியாகராஜனும் தயாரித்துள்ளனர்.

    இந்த படம் 15-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தின் டிரைலர் காட்சிகள், படங்கள் போன்றவை பத்திரிகை, டி.வி.களில் விளம்பரமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டபோது முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து நானும் அதை பார்த்தேன்.

    மூலக்கதையில் இருந்து மாறுபட்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வர்த்தக நோக்கத்தில் கற்பனையாக பல பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களை ஆபாசமாக சித்தரித்துள்ளனர். அண்ணண்மார் சாமிகளை வணங்கும் ஒவ்வொருவரின் மனதையும் புண்படுத்தும் விதமாக படம் அமைந்துள்ளது.

    தடை விதிக்க வேண்டும்

    எனவே இது அவதூறு குற்றத்துக்கு உட்பட்டது. இந்தப் படத்தை பார்த்த பிறகு கொங்கு வேளாளர் மக்களை தணிக்கைத்துறை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். உண்மைக்கு மாறான காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்தப் படம் வெளிவந்தால் அண்ணண்மார் சாமிகளின் மதிப்பு பாதிக்கப்படும். இதுபற்றி தணிக்கைத் துறையிடம் முறையிட்டு மனு கொடுத்தேன். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

    எனவே இந்த வழக்கு முடியும்வரை பொன்னர்-சங்கர் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்கு சினிமா தணிக்கை துறை சான்றிதழ் வழங்க தடை செய்ய வேண்டும்," என்று கூறியிருந்தார்.

    தடை விதிக்க முடியாது

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு:

    பொன்னர்-சங்கர் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் விசுவாசியாகவும், அந்த பாத்திரம் கடவுள் என்றும் மனுதாரர் கூறுகிறார். தயாரிப்பாளர்களால் கதை திரித்து கூறப்பட்டுள்ளதாகவும், அதற்கு சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு தணிக்கைத்துறை அதன் பின்னணியை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    உண்மையிலேயே அந்த படத்தில் வரும் கதையால் மனுதாரர் மற்றும் மக்களின் மத எண்ணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால், அரசியல் சாசனத்தின் 226-ம் பிரிவின் அடிப்படையில் இந்த கோர்ட்டில் ரிட் மனுவாக வழக்கு தாக்கல் செய்திருக்கக்கூடாது. மனுதாரரின் மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கைத் துறைக்கு அந்தப் பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

    இது போன்ற குற்றச்சாட்டுகளை தகுந்த கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருப்பது அவசியம். எனவே சம்பந்தபட்ட கோர்ட்டில் இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்யலாம். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Madras High Court dismissed a case filed against Thiagarajan directed Kalaignar's Ponnar - Shankar film for portraying Annanmar Swamy in wrong. The case was filed M Logananthan of Coimbatore few days ago. But after go through the petition, Justice P Jyothimani dismissed the same and advised the petitioner to file with proper evidence in appropriate court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X