சர்கார் படத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு.. நாளையே விசாரணை
சென்னை: சர்கார் படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கு நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்த நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று ராஜேந்திரன் என்பவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் நாளையே விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. படத்திற்காக ஆரவாரத்துடன் காத்திருக்கும் நிலையில் இப்படி திடீரென விவகாரம் வெடித்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











