சூர்யாவின் எஸ்3 படத்திற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ் 3 படம் வரும் 23ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்திற்கு எதிராக தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
எஸ் 3 படத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து தமிழக அரசு, படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications