twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘வேலையில்லா பட்டதாரி’க்கு எதிரான வழக்கு... தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்

    |

    சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் புகைப் பிடிக்கும் காட்சிகளை அகற்றக் கோரி ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தனுஷ், அமலாபால் நடித்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிரில் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

    அதில் அவர் கூறியிருந்ததாவது :-

    வேலையில்லா பட்டதாரி...

    வேலையில்லா பட்டதாரி...

    நடிகர் தனுஷ், நடிகை அமலாபால் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் கடந்த ஜூலை 18-ந்தேதி வெளியானது. இந்த படத்தில், புகைப்பிடிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளது.

    விழிப்புணர்வு வாசகம்...

    விழிப்புணர்வு வாசகம்...

    திரையில் அந்த காட்சிகள் வரும்போது, புகைப் பிடிப்பதால் உடல் நலத்துக்கு கேடு என்ற வாசகம், மிகவும் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் படம் பார்ப்பவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இல்லை.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    எனவே, இந்த காட்சிகளை நீக்கவும், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு கடந்த ஜூலை 25-ந் தேதி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்திருந்தார்.

    தள்ளுபடி...

    தள்ளுபடி...

    இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ‘மனுதாரர் அரசுக்கு புகார் அனுப்பி அடுத்த சில நாட்களில் இந்த ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க அவகாசம் வழங்காமல், இந்த வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டனர்.

    English summary
    The Madras high court has dismissed the Case against the movie velaiilla pattathari
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X