twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வழக்கும் தள்ளுபடி.. 'பத்மாவத்' படத்துக்கு அரணாக நிற்கும் நீதிமன்றம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'

    டெல்லி : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'பத்மாவத்'.

    பல எதிர்ப்புகளைச் சந்தித்து, தடை முயற்சிகளை நீதிமன்றத்தின் வாயிலாக எதிர்கொண்டு நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது 'பத்மாவத்'.

    'பத்மாவத்' படத்தில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

    சஞ்சய் லீலா பன்சாலி

    சஞ்சய் லீலா பன்சாலி

    கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'பத்மாவதி' படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சஞ்சய் லீலா பன்சாலி. அது முதலே எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. படத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியிடப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் எதிர்ப்பாளர்கள் மேலும் வன்மையாக போராட்டங்களில் இறங்கினார்கள்.

    தலைக்கு விலை

    தலைக்கு விலை

    இப்படத்தில் பத்மாவதியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்தால் பல கோடி பரிசு என கர்ணி சேனா அமைப்பு அறிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இயக்குநர் பன்சாலி, நடிகை தீபிகா படுகோனே ஆகியோரின் தலையைக் கொண்டு வந்தால் 5 கோடி பரிசு என அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர்.

    தடை கோரி போராட்டம்

    தடை கோரி போராட்டம்

    போராட்டக்காரர்கள் சொல்வது போல ராஜபுத்திரர்களையும், ராணி பத்மாவதியையும் இந்தப் படத்தில் தவறாகச் சித்தரிக்கவில்லை என உறுதியாகச் சொன்னார் பன்சாலி. ஆனால், எதிர்ப்பாளர்கள் அவரது பேச்சைக் காது கொடுத்துக் கேட்காமல் 'பத்மாவதி' படத்தை வெளியிட தடை கோரினார்கள்.

    டைட்டில் மாற்றம்

    டைட்டில் மாற்றம்

    சென்சார் போர்டு பரிந்துரைப்படி, சில காட்சிகள் நீக்கப்பட்டு 'பத்மாவத்' எனப் பெயர் மாறியது படம். அதற்குப் பின்பும் சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட, நீதிமன்றம் தடையை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டது. இதனால், கடந்த 25-ம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது 'பத்மாவத்'.

    நீதிமன்றம் ஆதரவு

    நீதிமன்றம் ஆதரவு

    இந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் சந்தித்திராத எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், வழக்குகளையும், தடைகளையும் சந்தித்து அனைத்தையும் வென்று வெளிவந்திருக்கிறது பத்மாவத் திரைப்படம். பத்மாவத் படத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டன. அவை எல்லாவற்றிலும் பத்மாவத்துக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

    காட்சிகளை நீக்க கோரிக்கை

    காட்சிகளை நீக்க கோரிக்கை

    படம் வெளிவந்துவிட்ட நிலையிலும் அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மிஸ்ரா அடங்கிய பென்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    மனு தள்ளுபடி

    மனு தள்ளுபடி

    மனுவை விசாரித்த நீதிமன்றம் "பத்மாவத் திரைப்படத்தை சென்சார் நன்றாக ஆராய்ந்து சில காட்சிகளை நீக்கி, சில மாறுதல்களை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தை வெளியிடவும் அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகும் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. படத்தை திரையிடுவதை தடுக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

    English summary
    'Padmaavat' faced various protests and banning efforts, released last Thursday. Many cases have been filed against Padmaavat. In all these, the court has given a verdict in favor of Padmaavat.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X