விஷாலின் ஆம்பள படத் தலைப்புக்கு எதிராக வழக்கு - இன்று விசாரணை
சென்னை: விஷாலின் ஆம்பள படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
விஷால் - ஹன்சிகா நடிக்க, சுந்தர் சி இயக்கியுள்ள படம் ஆம்பள. இந்தப் படம் நாளை மறுநாள் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
படத்தின் தியேட்டர்கள் லிஸ்ட் எல்லாம் அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று திடீரென்று ஸ்ரீசாய் சினி சர்க்யூட் என்ற பட நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ஆம்பள என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்க கில்டில் தான் ஏற்கெனவே பதிவு செய்து 40 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், இதற்காக ரூ 40 லட்சம் செலவழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனவே விஷாலின் ஆம்பள வெளியானால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவை விசாரித்த சென்னை சிட்டி 15வது சிவில் நீதிமன்றம், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











