twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனுமதியின்றி பிரசாரம்: நடிகர் செந்தில், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு

    By Siva
    |

    Comedy Actor Senthil
    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தி்ல் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக நடிகர் செந்தில் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து நடிகர் செந்தில் நேற்று ராஜாக்கமங்கலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் வடசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். நடிகர் செந்தில் பிரசாரம் செய்வதற்கு அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது. அதன்படி ராஜாக்கமங்கலம் பகுதியில் அனுமதியின்றி நடிகர் செந்திலை வைத்து பிரச்சாரம் செய்ததாக அதிமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதே போல் வடசேரி அண்ணா பேருந்து நிலையம் முன்பும் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து செந்தில் பிரசாரம் செய்தார். இதற்கும் அனுமதி வாங்கவில்லை. இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரியான ரகமத்துல்லா அளித்த புகாரின்பேரில் நடிகர் செந்தில், அதிமுக நிர்வாகி சகாய ராஜ் உள்ளிட்டோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    English summary
    Police have filed a case against actor Senthil and other ADMK functionaries for campaigning in Nagercoil without seeking prior permission. Election official Rahmathullah gave a complaint about this, based on that police have filed a case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X