twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஜான் ஆப்ரஹாம் படத்திற்கு எதிர்ப்பு…!

    ஜான் ஆப்ரஹாமின் சத்யமேவ ஜெயதே திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    |

    ஹைதராபாத்: இந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாமின் சத்யமேவ ஜெயதே திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் சிவாஜி நாகேஷ் உரையாடல்களில் பிரிக்க முடியாதது... என்ற கேள்வியை இப்போது கேட்டால் அதற்கு சினிமாவும் எதிர்ப்பும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எல்லா மொழி சினிமாவிற்கும் எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது.

    Case filed against John Abrahams upcoming movie!

    அந்த வகையில் இப்போது ஜான் ஆப்ரஹாமின் இந்திப்படமான சத்யமேவ ஜெயதே திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மிலாப் மிலானி ஜவேரி இயக்கியுள்ள இப்படத்தில் ஜான் ஆப்ரஹாம், மனோஜ் பாஜ்பாயி, அம்ருதா கான்விகார், ஆயிஷா ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளது.

    படத்தின் ட்ரெயிலரில் ஆக்ரோஷமான காவல்துறை அதிகாரியாக ஜான் ஆப்ரஹாம் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ஷியா முஸ்லீம்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக உள்ளதாகவும், அவற்றை நீக்க வேண்டுமெனவும் ஹைதராபாத் தென்மண்டல காவல் துணை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மதத்தை இழிவுபடுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துதல், இடம், போட்டி, மொழி போன்றவற்றின் மூலம் இரு வேறு பிரிவினருக்கிடையே பகையைத் தூண்டும் வண்ணம் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    English summary
    Bollywood actor John Abraham next venture is all set to hit the screens on august 15th. Shiya muslims group has filed a case against the movie in Hyderabad. They requested to remove the particular scene from the movie, which hurt their sentiments.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X