அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் '8 தோட்டாக்கள்'. இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனை தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகணேஷ், அதர்வா நாயகனாக நடிக்கும் 'குருதி ஆட்டம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்திற்கு எதிராக வழக்கு

படத்திற்கு எதிராக வழக்கு

இந்தப் படம் டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போகிறது. இந்நிலையில் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் வழக்கு

ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் வழக்கு

இதுதொடர்பாக ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியதாக கூறியுள்ளது.

இரண்டாம் குத்து - ஒப்பந்தம்

இரண்டாம் குத்து - ஒப்பந்தம்

இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்ஃபோர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை என்றும், அதற்கு பதிலாக வினியோக உரிமையை திருப்பி தருவதாகவும், படத்தில் லாபத்தில் 40 சதவீதத்தை தரும்படியும், நஷ்டம் ஏற்பாட்டால் மீதமுள்ள தொகையை திரும்பி தருவதாகவும் ஒப்பந்தம் செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்க கோரிக்கை

தடை விதிக்க கோரிக்கை

படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டிய நிலையில், ராக் ஃபோர்ட் தயாரிப்பில் அதர்வா நடிப்பில் ஸ்ரீ கனேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வந்ததாகவும், அதனால் தங்களுக்கு தர வேண்டிய ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 24 சதவீத வட்டியுடன் ஒரு கோடியே 94 லட்சம் ரூபாயை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராக் ஃபோர்ட் நிறுவனம் சார்பில் படத்தை தற்போது வெளியிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X